‘மண் காப்போம்’ வெற்றியால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் நன்மை: கர்நாடகா முதல்வர் சிலாகிப்பு

கோவை: “மண் வளத்தை பாதுகாக்க சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள பயணம் தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் எழுதப்படும்” என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்தியாவின் 8-வது மாநிலமாக கர்நாடகா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், “சத்குருவின் பயணத்தைப் பொறுத்தவரை, இது தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் … Read more

Agneepath: அக்னிபாத் திட்டம்… குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்!

நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து தெலங்கானா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன. இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, அமலாக்கத் துறைக்கு எதிரான … Read more

திடீரென கீழே விழுந்த பெண்.. பின்னால் வந்த இளைஞர் காரணம் என கூறி ஒரே அடம்.. கேமரா இல்லையெனில் பெண்டு கழண்டி இருக்கும்..

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், தான் கீழே விழுவதற்கு பின்னால் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் தான் காரணமென சண்டையிட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. Source link

ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பேரணி

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் அக்னிபாதை திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் பேரணியாக சென்றனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பேரணியாக சென்றனர். மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றுக்கொண்டனர்.

காதலனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.!

திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரபல ஒடிசா தொலைக்காட்சி நடிகையான ரேஷ்மிரேகா , திருமணம் செய்து கொள்ளாமல், காதலன் சந்தோஷ் பட்ராவுடன் கடந்த ஒன்றரை மாதமாக ஒரே வாடகை வீட்டில் குடித்தனம்  நடத்திவந்த நிலையில் , அந்த வீட்டில் மர்மமான முறையில் சடலமாக தூக்கில் தொங்கினார். காதலன் சண்டையிட்டு பிரிந்து சென்றதால் ரேஷ்மி தற்கொலை செய்து  கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறும் … Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் சடலமாக மீட்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவின் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையிலிருந்து சுமார் 350 கி.மீ  தொலைவில் உள்ள சாங்கி மாவட்டத்தில், அருகருகே உள்ள இரண்டு வீட்டில் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களான மாணிக் மற்றும் போபாட் வான்மோர் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசித்து வந்துள்ளனர். மூத்த சகோதரரான மாணிக் கால்நடை … Read more

சுட்டெரிக்கும் வெயில்: உயர்கிறதா குளிர்சாதனங்களின் விலை?

குளிர்சாதன இயந்திரங்களின் விலை ஜூலையிலிருந்து 7 முதல் 10 சதவிகிதம் உயர உள்ளது. குளிர்சாதன இயந்திரங்களின் மின்சார சேமிப்பு திறனை பொறுத்து அவற்றுக்கு நட்சத்திர குறியீடு வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அவ்விதிகள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மாற்றப்படுகின்றன. இதன்படி தற்போது 5 நட்சத்திர குறியீடு உள்ள குளிர்சாதன இயந்திரங்களுக்கு இனி 4 நட்சத்திர குறியீடு மட்டுமே வழங்கப்படும்.  மின்சாரத்தை மிக அதிகளவு சேமிக்கும் இயந்திரங்களுக்கு 5 நட்சத்திர குறியீடு வழங்கப்படும். இதற்கேற்ப … Read more

“நூபுர் ஷர்மா கருத்து சரியா என நண்பர் அப்பாஸிடம் பிரதமர் மோடி கேட்க வேண்டும்” – ஒவைசி

ஹைதராபாத்: முகம்மது நபிகள் குறித்து நுபுர் சர்மா சொன்ன கருத்து சரியா என பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர் அப்பாஸிடம் கேட்க வேண்டும் என்று அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சை அளிக்கும் வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது கருத்தை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடு என இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு … Read more

அக்னிபத் திட்டம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ராணுவ பணிகளுக்கு நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் தற்போதுள்ள வழக்கமான நடைமுறையின் படியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரியும் பிகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தி்ல் ஈடுபட்ட இளைஞர்கள் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களை தீவைத்து எரித்துள்ளதால், இதுவரை … Read more

ஆந்திராவில் கரடி தாக்கி 6 பேர் படுகாயம்.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். வஜ்ரப்பு கொத்தூரூ கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 6 பேரையும் பசுமாடு ஒன்றையும் கரடி தாக்கியது. படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். Source link