இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு ட்ரோன் திருவிழாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பின்னர் கிசான் ட்ரோன் விமானிகளுடன் உரையாடுகிறார். பின்னர் திறந்தவெளி ட்ரோன் செயல் விளக்கங்களை காண உள்ளார். கண்காட்சி மையத்தில் 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த உள்ளனர். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் … Read more

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் தேசிய மாநாடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை கேரள சட்டசபையில் (திருவனந்தபுரம்) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி … Read more

சலில் பரேக்கிற்கு ரூ.71 கோடி சம்பளம்: ஆண்டுக்கு 43% உயர்வு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்போசிஸ்

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் ஆண்டு சம்பளம் ரூ.49.7 கோடியில் இருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.71 கோடியாக உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த … Read more

ஹிஜாப் தடையை அமல்படுத்தக்கோரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவ மாணவிகள் போராட்டம்!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது போல கல்லூரி மாணவிகளும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மங்களூருவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி முதல் புதிய சீருடை சட்டத்தை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கர்நாடக அரசாணை செல்லும் என்று மார்ச் 15-ம் … Read more

செல்போன் திருடியதாக கூறி இளைஞருக்கு கொடூர தண்டனை அளித்த லாரி ஓட்டுநர்கள்!

ஒடிசாவில் செல்போன் திருடிய நபரை லாரியின் முன்பக்கமாக கட்டிவைத்த ஓட்டுநர், வாகனத்தை அதிவேகமாக இயக்கியுள்ளார். ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கஜேந்திரா ஸ்வைன். பகுதிநேரமாக லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர் மற்ற லாரி ஓட்டுநர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அப்போது ஒரு லாரி ஓட்டுநர் தன் அலைபேசி காணவில்லை என்று கத்தியதால் அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் கஜேந்திராவை பிடித்துள்ளனர். அவரது இரு கைகளையும் இழுத்து லாரியின் முன்பக்கமாகக் … Read more

‘அரசியல் தெரியாவிட்டால் சமைக்கப் போங்க’ – சுப்ரியா சூலேவை சாடிய பாஜக தலைவர்; குவியும் கண்டனங்கள்

மும்பை: “அரசியல் தெரியாவிட்டால் சமையல் செய்யப் போங்கள்” என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலேவை விமர்சித்த மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், கட்சிக் கூட்டத்தில் பேசிய சுப்ரியா சூலே, “மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒருமுறை டெல்லிக்குச் சென்றார். அங்கு யாரையோ சந்தித்தார். அடுத்த இரண்டு நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி … Read more

காவல்நிலையம் அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து கொலை கும்பல் வெறிச்செயல்

புதுச்சேரியில் காவல்நிலையம் அருகே வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி சரத் என்கிற பொடிமாஸ், அரியாங்குப்பம் காவல்நிலையம் பின்புறம் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அதிகாலையில் வீடு புகுந்த மர்ம கும்பல், வீட்டிலிருந்த சரத்தின் மாமாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அமரவைத்துவிட்டு, சரத் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்று கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் வெட்டி கொடூரமாக … Read more

உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்

ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி ஐதராபாத் சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பின்னர் கூறியதாவது:- இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இன்று பல ஊழியர்கள் பட்டங்களும், தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். பள்ளியை இந்த நிலைக்கு கொண்டு செல்ல பலரது தவம் இருந்தது. அவர்கள் அனைவரையும் … Read more

மேற்கு வங்கத்தில் மாநில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார்: அமைச்சர் ப்ரத்யா பாசு தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார் என்று அமைச்சர் ப்ரத்யா பாசு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டவிரோத விசா வழக்கு – மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

சீன பிரஜைகளுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 30ம் தேதி வரை சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். 2008-2014ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு இந்தியாவில் பணிக்கான விசாவை முறைகேடாக பெற்றுத்தருவதற்கு 50 லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு உதவி … Read more