மதம் தொடர்பான கருத்து தெரிவித்த ஆபாச நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: மதம் தொடர்பான கருத்துகளை தெரிவித்த ஆபாச நடிகை உர்ஃபி ஜாவேத்துக்கு எதிராக கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்களால் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கூட கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

கர்நாடகாவில் 8 கி.மீ தூரம் கர்ப்பிணியை தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலம்!

போக்குவரத்து வசதி இல்லாததால், எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவின் தொட்டனே கிராமத்தில், போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை சார்பில் ஜீப்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சாமராஜநகரில் உள்ள வனத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ‘ஜன வன சேது’ என்ற சிறப்பு முயற்சியை சில வாரங்களுக்கு முன் துவக்கி, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாகனங்கள் வழங்க உறுதியளித்தனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சாந்தலா என்ற … Read more

“நாட்டின் நிலைமை எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது, ஒற்றுமை வேண்டும்” – அமர்த்தியா சென் கருத்து

கொல்கத்தா: நாட்டின் நிலைமை தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், ஹிந்து, இஸ்லாமியர் என மத ரீதியிலான பேதம் இல்லாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமை வேண்டும் எனவும் தனது கருத்து தெரிவித்துள்ளார் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென். இந்திய நாட்டில் கடந்த சில வாரங்களாக சில தனி நபர்களின் கருத்தினால் இரு வேறு மதங்களை சார்ந்த மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற படுகொலை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்நிலையில், நாட்டில் நிலவும் மத மோதல்களை … Read more

பா.ஜ.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர்சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் காவல்துறையினர் ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 18 ஆம் தேதி நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்தி டெல்லி போலீசார் வாக்குமூலம் … Read more

கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) ரயில்களில் முதல் வகுப்பு ஏ.சி.யில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதேபோல முன்னாள் எம்பிக்கள் 2ம் வகுப்பு ஏ.சி.யில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி.யில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு செலுத்தும். ரயில்வேயின் … Read more

லவ் லெட்டர்… வருமான வரி துறையை பங்கமாய் கலாய்த்த சரத் பவார்!

கடந்த 2004, 2009, 2014, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க சரத் பவாருக்கு வருமான வரித் துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கப் பிரிவு என்றால் என்ன என்பது பொதுமக்கள் அவ்வளாக தெரியாது. ஆனால் இப்போது நிலைமை வேறாக … Read more

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – டெல்லி அரசு அதிரடி

டெல்லியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை தடையை மீறி பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் கோபால் ராய் எச்சரித்துள்ளார். ஜூலை 10ஆம் தேதி வரை கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதனை மீறி பயன்படுத்தினால்  5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  Source link

ஏக்நாத் முதல்வரான நிலையில் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்ேட முதல்வரான நிலையில், தற்போது எதிர்கட்சியை சேர்ந்த சரத்பவாருக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏக்நாத் ஷிண்டே முதல்வரான … Read more

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு – என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதியை குறைத்து ரிலையன்ஸ் உள்ளிட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டிலே அதிக அளவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நடவடிக்கை மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்படுகிறது. தற்போது … Read more

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 200 ராணுவ வாகனங்கள்.. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை..!

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத நவீன வசதிகள் கொண்ட 200 ராணுவ வாகனங்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளன. தரையிலும், தண்ணீரிலும், வனப்பகுதியிலும் எளிதாக இந்த வாகனங்களை இயக்க முடியும் என்பதோடு, வெடிகுண்டுகளை கண்டறியும் ரேடார் வசதியும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 கிலோ எடையுள்ள குண்டு வெடித்தாலும் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  Source link