முகமது நபி குறித்து அவதூறு கருத்து: பிரதமர் மோடிக்கு சசிதரூர் கேள்வி

புதுடெல்லி: பாஜக செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரும் முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மதச்சார்பற்ற நாடான நமது நாட்டில் இதுபோன்ற பேச்சுகள் தேவையற்றது. நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? இந்த … Read more

ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்திச் சென்ற மர்ம பெண்.!

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மிர்சாவலி- ஹூசைன் தம்பதியினருக்கு 3 வயதில் ஷபிதா என்ற மகள் உள்ளார். கடந்த 8ம் தேதி ஷபிதா தாயுடன் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார். புகாரின்பேரில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஷபிதாவை மர்ம பெண் ஒருவர் அழைத்து செல்லும் காட்சி … Read more

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அல்லூரியில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்த நிலையில், தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அளவில் புதிய கட்சியை தொடங்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்?

தேசிய அளவில் புதிய கட்சியை தொடங்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான அவர், நாடுதழுவிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்கு கைமேல் பலன் கிடைக்காத சூழலில், பாரதிய ராஷ்ட்ர சமிதி என்ற பெயரில் தேசியக் கட்சியொன்றை புதிதாக தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஜூன் 19ஆம் … Read more

ராகுலுக்கு ஆதரவு | வாய்மையே வெல்லும் போஸ்டருடன் டெல்லியில் காங்கிரஸார் 'சத்தியாகிரகம்': போலீஸ் குவிப்பு

நேஷன் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்னும் சற்று நேரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போலீஸாரை சிலரை கைது செய்துள்ளனர். சத்தியாகிரக யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். முன்னதாக நேற்றே காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்த காவல்துறை தடை உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இன்று காலையிலேயே ராகுலுக்கு ஆதரவாக … Read more

“இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை” – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளின் மக்கள் ஆரோக்கியத்தை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக சாடினார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று பியூஷ் கோயல் கூறினார். எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும், அழுத்தத்தில் எந்த முடிவுகளையும் … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒருநாள் பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது.. 10 பேர் பலி…..ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 8,084 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,30,101 ஆக உயர்ந்தது.* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: இன்று ஆஜராகிறார் ராகுல்! டெல்லி காங்கிரஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு

காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை `சத்யாகிரக பேரணி’ நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுத்தது டெல்லி காவல்துறை. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இன்று காலை ராகுல் காந்தி நேரில் ஆஜராக உள்ளார். ராகுல்காந்தி ஆஜராகும்போது நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது. … Read more

2ஆவது போட்டியிலும் கோட்டைவிட்ட இந்தியா!!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், 4 தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 பந்துகளில் 34 … Read more

கொடுங்கையூர் லாக் அப் மரணம் – 5 காவலர்கள் சஸ்பெண்ட்!!

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் லாக் அப் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு சிறை மரணம் குறைவதாக இல்லை. அண்மையில் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் விசாரணையின் போது உயிரிழந்தார். அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒரு உயிரிழந்துள்ளார். விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை … Read more