ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்: ரூ.44,075 கோடிக்கு ஏலம்

மும்பை: 2023 முதல் 2027-ம் ஐபிஎல் தொடர்களுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது. 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியாவில் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்புவதற்கான உரிமம் இந்தியாவை தவிர மற்ற  பகுதிகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் என ஏலம் நடத்தப்பட்டது.இதில் டிஸ்னி-ஹாட் ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், சூப்பர்ஸ் போர்ட், டைம்ஸ் இன்டர்நெட், 18 … Read more

மேற்கு வங்க கலவரம் | 200 பேர் கைது; நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. இவர், முகமது நபிகளை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை டிஜிபி மனோஜ் மாளவியா தெரிவித்தார். இதற்கிடையில் சர்ச்சைக் கருத்தை முன்வைத்த … Read more

ஊழல் அம்பலமானதால் காங்., போராட்டம்: ஸ்மிர்தி இராணி பாய்ச்சல்!

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் … Read more

வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை இடித்துத்தள்ளியது மாவட்ட நிர்வாகம்.!

மணிப்பூர் மாநிலம், தௌபால் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியது. இந்த வனப்பகுதியில் மொத்தம் 180 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாவும், படிப்படியாக அனைத்தும் அகற்றப்படும் என்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

டெல்லி: மதிய உணவு இடைவெளிக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 

'ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது' – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்… இன்று வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சொந்தப் பணத்தை இழந்தது ஒருபுறம் கடன் வாங்கி பணத்தை இழந்தது மறுபுறம் என மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சற்று பின்னோக்கி பார்த்தால் அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பறிபோகும்நிலையில், இதனை … Read more

அதிகரிக்கும் கரோனா தொற்று: அனைத்து மாநிலங்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

சென்னை: கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரிக்க துவங்கிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனா தொற்று நிலவரம் குறித்து இன்று காணொலி … Read more

நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு!

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையானது. இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்டவைகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து, பாஜகவின் … Read more

எரிவாயு வாகனங்களின் விற்பனை புதிய உச்சம் தொடும் – தயாரிப்பு நிறுவனங்கள்

எரிவாயு வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டக் கூடும் என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஐந்தரை ரூபாய் வரை செலவாகும் அதே நேரத்தில் எரிவாயு வாகனங்களுக்கு இரண்டு ரூபாய் 20 காசுகளே செலவாகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 2 இலட்சத்து 61 ஆயிரம் எரிவாயு வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டில் டீசல் வாகனங்களைவிட எரிவாயு வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பத்தாயிரம் … Read more

பழைய பொருள் வியாபாரியிடம் 1,105 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்; புனே போலீசார் அதிரடி நடவடிக்கை

புனே: புனேயில் பழைய பொருட்கள் வியாபாரியிடம் இருந்து 1,105 துப்பாக்கி குண்டுகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் குருவார் பெத் பகுதியில் ஸ்கிராப் டீலர் (பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி) தினேஷ் குமார் (34) என்பவரிடம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதாக குற்றப்பிரிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்கிராப் டீலரின் இருப்பிடங்களில் சோதனை … Read more