ஆக.,6இல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். … Read more