ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் சில மாதம் நீடிக்க சம்மதம் தெரிவித்தார் கே.கே.வேணுகோபால்

டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் சில மாதம் நீடிக்க கே.கே.வேணுகோபால் சம்மதம் தெரிவித்துள்ளார். நாளையுடன் பதவிக்காலம் மூடியிருந்த நிலையில் ஒன்றிய அரசின் கோரிக்கையை கே.கே.வேணுகோபால் ஏற்றுள்ளார்.

தையல் கடைக்காரரை கொலை செய்தது பாகிஸ்தானின் ஸ்லீப்பர்செல்களா? உளவுத்துறை பகீர் தகவல்

ராஜஸ்தானில் தையல் கடைக்காரரை கொலை செய்தது பாகிஸ்தானின் ஸ்லீப்பர்செல்கள் என்று இந்திய உளவு அமைப்புகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரைச் சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவரை இரண்டு பேர் நேற்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அவரை கொலை செய்த வீடியோவையும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் … Read more

அபார்ட்மென்ட் முதல் தனி வீடு வரை: நீலத்தடி நீர் பயனாளிகள் நாளைக்குகள் பதியாவிட்டால் நடவடிக்கை – மத்திய அரசு அதிரடி

சென்னை: நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவர்கள் கட்டயாம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், … Read more

'ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்' – ஆளுநரை விமர்சித்த சிவசேனா!

ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கி உள்ளார். தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஏக்நாத் ஷிண்டே தங்கி உள்ளார். இதன் காரணமாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சிவசேனா எம்எல்ஏக்கள், அதிருப்தித் தலைவர் ஏக்நாத் … Read more

யாரும் விலைக்கு வாங்காத நிலையில், மத்திய பிரதேச அரசுக்கு சொந்தான ஹெலிகாப்டர் பழைய பொருட்கள் கடைக்கு விற்பனை.!

யாரும் விலைக்கு வாங்காத நிலையில், மத்திய பிரதேச அரசுக்கு சொந்தான ஹெலிகாப்டர் பழைய பொருட்கள் கடைக்கு விற்கப்பட்டது. Bel 430 VT MPS என்ற ஹெலிகாப்டரை மத்திய பிரதேச அரசு கடந்த 1998 ஆம் ஆண்டு வாங்கியது. பல்வேறு விபத்துக்களை சந்தித்த அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஏழு முறை ஏலம் விடப்பட்டும் யாரும் எடுக்காத நிலையில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரை, விமான பழைய பாகங்களை ஏலம் எடுக்கும் நிறுவனம் வெறும் … Read more

பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 16 பேர் பலி… உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!!

பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர். பீகாரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள 38 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 16 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகபட்சமாக கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா … Read more

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு – யாருக்கு சாதகம் – யாருக்கு பாதகம்?

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா… யாருக்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சாதகமாக இருக்கும் என்பது குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், சிவசேனா எம்எல்ஏக்கள் 39 பேர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்த … Read more

மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்பு விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மும்பை: மும்பையில் கிழக்கு குர்லா பகுதியில் நாயக் நகர் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் 9 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

ராஜஸ்தானில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் … Read more

ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரிக்கிறது. கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருந்தது.