ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

டெல்லி: ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை, விநியோக நேர மாறுபாடுகள் பற்றி பதிலளிக்க ஆணையிட்டது. உணவகங்களில் விலை, அளவு  ஆகியவை இடையே வேறுபாடு போன்றவை பற்றி 15 நாளில் பதில்தர ஆணை பிறப்பித்தது.    

’பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்துக’ – மத்திய அரசு

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை … Read more

உ.பி-யில் ‘புல்டோசர்’ நடவடிக்கையால் வீடு இடிப்பு… யார் இந்த அஃப்ரீன் பாத்திமா?

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக 130-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். குறிப்பாக, பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை முன்னின்று நடத்தியதாக ‘வெல்ஃபேர் … Read more

President Election: குடியரசு தலைவர் வேட்பாளர் – சரத் பவாருக்கு காங். ஓகே!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. … Read more

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் சொந்த ஊருக்கு பயணம்.. கொச்சியில் நயன்தாரா தம்பதிக்கு உற்சாக வரவேற்பு..!

பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று கேரளா புறப்பட்டுச் சென்றனர். இவர்களது திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. பின்னர் இருவரும் தம்பதி சகிதமாக திருப்பதி சென்று  ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல முடிவு எடுத்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று விமானம் மூலம் கொச்சி சென்றனர். அங்கு அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து  திருவல்லாவுக்கு தம்பதியினர் புறப்பட்டு சென்றனர். … Read more

ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்: ரூ.44,075 கோடிக்கு ஏலம்

மும்பை: 2023 முதல் 2027-ம் ஐபிஎல் தொடர்களுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது. 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியாவில் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்புவதற்கான உரிமம் இந்தியாவை தவிர மற்ற  பகுதிகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் என ஏலம் நடத்தப்பட்டது.இதில் டிஸ்னி-ஹாட் ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், சூப்பர்ஸ் போர்ட், டைம்ஸ் இன்டர்நெட், 18 … Read more

மேற்கு வங்க கலவரம் | 200 பேர் கைது; நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. இவர், முகமது நபிகளை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை டிஜிபி மனோஜ் மாளவியா தெரிவித்தார். இதற்கிடையில் சர்ச்சைக் கருத்தை முன்வைத்த … Read more

ஊழல் அம்பலமானதால் காங்., போராட்டம்: ஸ்மிர்தி இராணி பாய்ச்சல்!

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் … Read more

வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை இடித்துத்தள்ளியது மாவட்ட நிர்வாகம்.!

மணிப்பூர் மாநிலம், தௌபால் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியது. இந்த வனப்பகுதியில் மொத்தம் 180 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாவும், படிப்படியாக அனைத்தும் அகற்றப்படும் என்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

டெல்லி: மதிய உணவு இடைவெளிக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.