ராஜஸ்தானில் தையல்கடைக்காரர் தலையை வெட்டிய 2 பேர் கைது

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை உரிமையாளர் கண்ணையா லால் என்பவரை கொன்றதாக ரியாஸ் அக்தர் மற்றும் கவுஸ் முகமது ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு ஒன்று டெல்லியில் இருந்து உதய்பூர் விரைந்துள்ளது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்கடை உரிமையாளரை இரண்டு பேர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பின்னர் சமூக ஊடகப்பதிவில் … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா … சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 14,506 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,33,345 ஆக உயர்ந்தது.* புதிதாக 30 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். முகேஷ் அம்பானியின் இடத்தில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு பங்குச்சந்தைகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தில் தமது வாரிசுகள் மெல்லமெல்ல கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என முகேஷ் அம்பானி கடந்தாண்டே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இந்த ஆண்டு டெல்லியில் இருந்து ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம் – கோயில் நிர்வாகம் தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஜூன் 30) தொடங்குகிறது. இதுகுறித்து அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிதிஷ்வர் குமார் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம். இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கும் பிறகு ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதாரணி வரையும் சென்று அங்கிருந்து குகைக்கோயிலுக்கு செல்லலாம். வழிபாட்டுக்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஸ்ரீநகர் … Read more

பக்தர்கள் வருகையால் விழாக் கோலம் பூண்ட அமர்நாத்.. யாத்திரையை ஒட்டி ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அமர்நாத் யாத்திரை இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதி பெற்ற பக்தர்கள் ஜம்மு மலையடிவார முகாமில் திரண்டுவருகின்றனர். நாளை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து யாத்திரையின் முதல் குழுவை அனுப்பி வைக்கிறார். அமர்நாத் குகையில் சுயம்புவாகத்  தோன்றும் பனிலிங்கம்  ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகிறது. அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, விடுகிறது. அமர்நாத் பக்தர்களுக்கு … Read more

குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை

அகமதாபாத் : குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பாத் ஆகியோரை விடுவிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக புகார்: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுப்பு

சென்னை: உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ் முகம்மது என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் என கைது செய்த ஏடிஎஸ் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், எங்கள் அமைப்புக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுத்துள்ளது.  Source link

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்ப்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. அர்ஜூன் டாங்கியில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறுகிய தூரம் முதல் தொலை தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் ஏவுகணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க திட்டம் ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் வலியுறுத்தல்

சண்டிகார்: ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன. ஜிஎஸ்டி.யை 2017ல் அமல்படுத்திய பிறகு, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக ஒன்றிய அரசு உறுதி அளித்தது. இந்த மாதத்துடன் இந்த 5 ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறை உள்ளதாலும், முக்கிய வருவாய் ஆதாரங்கள் பறிபோனதாலும் இழப்பீடு காலத்தை மேலும் நீட்டிக்க … Read more

தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ

ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தனிப்படை அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர நகரைச் சேர்ந்தவர் கன்னையா லால். தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருக்கும் இவர், அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்னையா லால் … Read more