அக்னிபாதை திட்டம் – விமானப்படையில் இணைய இதுவரை 56,960 பேர் விண்ணப்பம்

அக்னிபாதை திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் கீழ், விமானப்படையில் சேர ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமானோர் இணையதளம் https://agnipathvayu.cdac.in/AV/ வாயிலாக ஆர்வமாக விண்ணப்பித்து வரும் நிலையில், அவர்களுக்கான தேர்வு ஜூலை 24ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. Source link

அசாமில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு.! தொடரும் மீட்பு பணி

கவுகாத்தி: அசாமில் கனமழை காரணமாக பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் வெள்ளம், நில சரிவுகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 121 ஆக உயர்ந்துள்ளது. அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களை சேர்ந்த 2,894 … Read more

இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி : பிரதமர் மோடி

இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் மத்தியி பேசிய போது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 4 பேரில் மூவர் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புகின்றனர் – ஆய்வில் தகவல்!

ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 4 பேரில் மூவர் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. CIEL என்ற நிறுவனம் இந்தியாவில் முன்னணியில் உள்ள 40 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆய்வு நடத்தியது. சுமார் 9 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 4 பேரில் மூவர் அலுவலகம் வந்து பணியாற்ற விரும்பாதது தெரியவந்தது. அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்தினால், பலர் பணியை விட்டுவிடுவதால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  Source link

முதுகுதண்டில் அறுவை சிகிச்சை; அமரீந்தர் சிங்கிடம் நலம் விசாரித்த பிரதமர்

பஞ்சாப்: முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமரீந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.  பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநில முன்னாள் முதல்வருமானவர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002-2007 மற்றும் 2017-2021 உட்பட 9 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமரீந்தர் சிங்குக்கு, முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது … Read more

நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழப்பச் சூழலில் … Read more

பலத்த காற்று வீசியதால் திடீரென பறந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை..!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வீசிய சூறைக்காற்றால் அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து சென்று விழுந்தது. கண்டி தேயிலை தொழிற்சாலை வழியாக சென்ற அந்த பேருந்தின் மேற்கூரை காற்றில் பிய்த்துக்கொண்டு, தொழிற்சாலை வாசலில் அமர்ந்திருந்த தேயிலை தொழிலாளர்கள் அருகே சென்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.   Source link

மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உயிர்த்துடிப்புள்ள ஜனநாயாகம் தான் இந்தியாவின் பெருமை என்று ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசினார். ஜெர்மனியின் முனிச் நகரில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியாதான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு … Read more

டெல்லியில் ரோபோ மூலம் தீயணைக்கும் முயற்சி வெற்றி – முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் முதன் முறையாக ரோபோ உதவியுடன் குடோனில் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சமய்புர் பத்லி என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் அதிகாலை 2.18 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், முதன் முறையாக ரோபோ உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரோபோ உதவியுடன் மிக குறைந்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் … Read more

நகைக்கடை உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளுடன் தப்பிய கொள்ளையர்கள் – பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

பீகாரில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், உரிமையாளரையும் சுட்டுக்கொன்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாஜிப்பூர் நகரின் மையப்பகுதியான மதாய் சவுக்கில் உள்ள நகைக்கடைக்குள் கைத்துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி தாக்கினர். இதையடுத்து, நகைகளை கொள்ளையடித்த அவர்கள், அதனை தடுத்த உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.