சிவசேனா அரசு கவிழ்ந்தால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியா? – அமைச்சர்களின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து சூழந்துள்ள நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகி குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் வாய்ப்பிருப்பதாக சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நிலவுகிறது. இதன் மேலவைக்கு கடந்த ஜூன் 20-ல் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கூட்டணி ஒரு உறுப்பினருக்கான வாய்ப்பை இழந்தது. இதற்கு முன் நடைபெற்ற மாநிலங்களவை … Read more

பஞ்சாப்பில் லஞ்ச வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மர்ம மரணம்: துப்பாக்கி குண்டு பாய்ந்தது

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் மான், லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். டெண்டர் ஒதுக்கீடுக்கு ஒரு சதவீதம் லஞ்சம் கேட்ட சுகாதார அமைச்சரை கைது செய்து சிறையில் அடைந்தார். இதைத் தொடர்ந்து, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் டெண்டரை வழங்க லஞ்சம் கேட்ட ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி, கடந்த வாரம் கைது அதிரடியாக செய்யப்பட்டார். இந்நிலையில், பாப்லியின் மகனும் வழக்கறிஞருமான கார்த்திக் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு

ஹைதராபாத்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மத்திய … Read more

தென்னிந்திய படங்கள் ஓடுவதை ஆராய்வது பயனற்றது: மாதவன் ‘கடுகடு’

மும்பை: ‘தென்னிந்திய படங்கள் ஓடுவதை ஆராய்வது பயனற்றது’ என்று கருத்து கூறியுள்ளார் நடிகர் மாதவன்.மாதவன், சிம்ரன் நடித்துள்ள ‘ராக்கெட்ரி்: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படம் வரும் ஜூலை 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்திருப்பதுடன் இப்படத்தையும் மாதவன் இயக்கியுள்ளார். இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் வசூலைக் குவித்து வருவது குறித்து மாதவனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தென்னிந்தியப் படங்கள் திடீரென்று நன்றாக … Read more

ஒரே படத்தில் இத்தனை ஹீரோயின்களா? சல்மானுடன் இணையும் தென்னிந்திய நடிகைகள்

மும்பை: சல்மான் கானுடன் ஒரே படத்தில் தென்னிந்திய நடிகைகள் 5 பேர் இணைந்து நடிக்க உள்ளனர்.சல்மான் கான், அனில் கபூர், பர்தின் கான், பிபாஷா பாசு, லாரா தத்தா நடித்த படம், ‘நோ என்ட்ரி’. அனீஸ் பாஸ்மி இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாவது பாகம், ‘நோ என்ட்ரி மே என்ட்ரி’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இதிலும் சல்மான் கானுடன் அனில் கபூர் நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோவாக நடிப்பவர் முடிவாகவில்லை. அதே நேரம், ஹீரோயின்கள் மாற்றப்பட்டுள்ளனர். … Read more

'பாஜகவுக்கான ஆதரவு கிடையாது இது' – திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கிய மாயாவதி

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவை தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அவருக்கு … Read more

பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கடைசியாக ‘அகண்டா’ படத்தில் பாலகிருஷ்ணா நடித்தார். இப்போது கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து அவரது தரப்பில் கூறும்போது, ‘எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாலய்யாவுக்கு (பாலகிருஷ்ணா) கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவருடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை … Read more

3 கோடி காரை வாங்கிய அஜித்

லண்டன்: ஐரோப்பா நாடுகளில் பைக் பயணத்துக்கு நடுவே அஜித் குமார், இங்கிலாந்தில் உள்ள மெக்லாரன் கார் ஷோரூமுக்கு சென்று அங்கு உள்ள கார்களை பார்வையிட்டுள்ளார். மெக்லாரன் நிறுவனம், பார்முலா கார் பந்தயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். மெக்லாரன் 2018 720S காரின் அருகில் அஜித் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த கார் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய். இந்த காரை அஜித் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய … Read more

குஜராத் கலவர வழக்கு | அமித் ஷா பேட்டியை அடுத்து சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது

மும்பை: குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச … Read more

கார்த்திக் ஆர்யனுக்கு ரூ. 4.7 கோடி மதிப்பிலான மெக்லாரன் காரை பரிசளித்த இயக்குநர்..!

கார்த்திக் ஆர்யன் நடித்த திரைப்படம் வணிக முறையில் வெற்றிபெற்றதையடுத்து அவருக்குப் படத் தயாரிப்பாளர் பூசண் குமார் நான்கு கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள மெக் லாரன் காரைப் பரிசளித்துள்ளார். கார்த்திக் ஆர்யன் நடித்த பூல் புலையா 2 திரைப்படம் 184 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் முதல் மெக்லாரன் கார் அவருக்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. காருடன் நிற்கும் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  Source link