99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பொதுத்தேர்வு எழுதினர்: கர்நாடக கல்வி அமைச்சர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச … Read more

மத்திய அரசுக்கு எதிராக ‘பாரத் பந்த்’: மேற்கு வங்காளம், கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொல்கத்தா: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைத்து விடுத்தன. அதன்படி இன்று போராட்டம் தொடங்கியது. மத்திய தொழிற்சங்கங்களின் இந்த ‘பாரத் பந்த்’ காரணமாக பல மாநிலங்களில் பகுதி வாரியான பாதிப்பு இருந்தது. வங்கி சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தொழிற்சங்கங்கள் அதிகம் நிறைந்த மேற்கு வங்காளத்தில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை … Read more

புதிய வருமான வரிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும்: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு

டெல்லி: புதிய வருமான வரிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசினார். திருத்தத்துக்கு மேல் திருத்தம் என வருமான வரி சட்டம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான சட்டமாக உள்ளது என கூறினார். தொண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முறை மிகவும் சிக்கலாக உள்ளது என தெரிவித்தார்.

பூட்டியிருந்த கடைக்குள் காது, மூளை, சிதைந்த முகப் பாகங்கள் – அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

மகாராஷ்டிராவில் பூட்டி கிடந்த கடைக்குள் காதுகள், மூளை, சிதைந்த முகப் பாகங்கள் கண்டறியப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ளது நாகா பகுதி. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் ஒரு கடை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கடை பூட்டியே இருக்கிறது. இதனிடையே, இந்த கடைக்குள் இருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்தக் குடியிருப்புவாசிகள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், அங்கு … Read more

கோவா முதல்வராக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்பு

பனாஜி: கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி … Read more

காங்கிரஸ் மீண்டும் பலம் பெற வேண்டும்.. கத்காரி போட்ட "குண்டு".. பாஜகவில் பரபரப்பு!

காங்கிரஸ் கட்சி மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக மாற வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்று மத்திய அமைச்சர் நிதின் கத்காரி கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மீண்டும் பலம் பெற வேண்டும் என்று தான் உண்மையிலேயே விரும்புவதாகவும் கத்காிர கூறியுள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கத்காரி பேசும்போதுதான் இந்த விருப்பத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஜனநாயகம் தழைத்தோங்க வலிமையான காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். … Read more

ஹிஜாப் உத்தரவை மீறும் மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்- கர்நாடகா அரசு எச்சரிக்கை

பெங்களூரு : கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது.  இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்த அரசின் உத்தரவு செல்லும் என பெங்களூரு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று  தொடங்கி உள்ளன. இந்த தேர்வுகளை,  8.74 லட்சத்துக்கும் அதிகமான மாணவ … Read more

நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேஷய்யா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேஷய்யா ஆகியோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.

பாஜக வெற்றியை கொண்டாடிய முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடிய முஸ்லிம் இளைஞரை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபர் அலி (25). பாஜகவின் தீவிர ஆதரவாளராக இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக சார்பில் நடைபெற்ற பிரசாரங்களில் பாபர் அலி தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார். இதனால் அவரது பகுதியில் இருந்த இஸ்லாமிய மக்கள் இடையே அவருக்கு … Read more

தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

புதுடெல்லி: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை ஒடிசா மாநிலம் பலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து காலை 10.30 மணி அளவில்சோதனை முறையில் ஏவப்பட்டது. இது திட்டமிட்டபடி வான் பகுதியில் தொலைதூரத்தில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கி அழித்தது” … Read more