பக்தர்களே.. ஏப்ரல் 10-ம் தேதி முதல் இதன் விலை உயர்கிறது..!

சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாதங்களின் கட்டணங்கள் விலை உயர்த்தப்படுவதாகவும், இந்த புதிய விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து சென்று, ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள், அங்குள்ள பிரசாதங்களான அரவணை பாயசம், அப்பம், நெய், விபூதி, குங்குமம் போன்றவற்றை வாங்கி வந்து தங்களது குடும்பத்தினர் மற்றும் … Read more

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை, மாலத்தீவு பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன்?

புதுடெல்லி: மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றடைந்தார். அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர், பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சென்றுள்ளார். முன்னதாக, மாலத்தீவு சென்றிருந்த அவர் நேற்று மாலையில் இலங்கை சென்றடைந்தார். இன்று தொடர்ந்து அவர் இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவின் அண்டை நாடான … Read more

ஜியோவின் நிறுவனம் தான் ஒன்றிய அரசு: ராஜ்யசபாவில் திமுக எம்.பி., கலாய்!

மத்திய பாஜக அரசு சாமானியர்களுக்கான அரசாக இயங்கவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் மோடி தனது நண்பர்களாக அதானி, அம்பானிக்காக ஏராளமான சலுகைகளை வாரி வழங்குவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் தான் வாசித்த நகைச்சுவை பதிவு ஒன்றை குறிப்பிட்டு மாநிலங்களவையில் திமுக எம்.பி., டிகேஎஸ் இளங்கோவன் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் … Read more

காங்கிரஸ் வலிமை குன்றினால் அவ்விடத்தை மாநிலக் கட்சிகள் பிடிக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எதிர்க்கட்சியின் இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்து விடாமல் இருக்க காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தின் புனேயில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு வலிமையான எதிர்க்கட்சி தேவை எனக் குறிப்பிட்டார். ஜனநாயகம் என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு சக்கரங்களால் இயங்குவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் வலிமை குன்றினால் அந்த இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துக்கொள்ளும் என்றும், அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.  … Read more

கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

திருவனந்தபுரம்: மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் முழு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதன்படி கேரளாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இன்று அதிகாலை முதல் அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பெரும் பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. பஸ், கார்கள் ஓடவில்லை என்றாலும் ரெயில்கள் … Read more

புதிய வருமான வரிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும்: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!

டெல்லி: புதிய வருமான வரிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என மாநிலங்களவையில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது; பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும் இன்றும், நாளையும் 48 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்தனர். இதற்கு அவைத் தலைவர் வெங்கையா … Read more

அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார வாகனங்கள்: அச்சத்தில் வாடிக்கையாளர்கள்

அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார வாகனங்களால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வரிச்சலுகையை வழங்கி வருகிறது மத்திய அரசு. ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட இருசக்கர மின்சார வாகனங்களின் தீ விபத்தால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் அல்லாபுரம் சாலையில் இருசக்கர மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் … Read more

மக்களே உஷார்.. பகுதி நேர வேலை.. நூதன முறையில் மோசடி..!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆரம்ப கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த புயல்ராஜ் மகன் சிவக்குமார் (25). இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது, விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், சிவக்குமாரின் நண்பர் முரளிதரன் என்பவருக்கு, ‘ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்ப்பதன் மூலம் ரூ.500 முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப்பார்த்த முரளிதரன், அதை தனது நண்பர் சிவக்குமாருக்கு அனுப்பி உள்ளார். வெளிநாடு செல்லலாமா..? … Read more

வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரசை ஓரங்கட்டிவிட்டு ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவி ஏற்றார். அவரது தலைமையில் 10 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலத்தில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு உதவி எண்ணை அறிவித்தார். இதன்மூலம், பொதுமக்கள் புகார் மற்றும் வீடியோ அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் … Read more

மேற்கு வங்க சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு: எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்

கொல்கத்தா: பிர்பும் கலவரம் தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எம்எல்ஏகள் பலர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. பேரவைக் கூட்டம் தொடங்கியதும், பாஜக எம்எல்ஏக்கள், பிர்பும் அருகே போக்டுய் கிராமத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பிய பாஜக எம்எல்ஏக்கள், உள்துறையை வைத்திருக்கும் மாநில முதல்வர் … Read more