கோவா முதலமைச்சராக 2வது முறையாக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்பு!!

பனாஜி: கோவா முதலமைச்சராக 2வது முறையாக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். கோவா தலைநகர் பனாஜி நகரில் உள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை முதல்வர் பிரமோத் சாவந்திற்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள்,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கோவாவின் 40 சட்டப்பேரவைத் … Read more

கோவா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

கோவா மாநிலத்தின் 14வது முதல்வராக பா.ஜ.கவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அண்மையில் நடைபெற்று முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று சுயேச்சை மற்றும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்நிலையில் கோவா மாநிலத்தின் முதலமைச்சராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று … Read more

அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடக்கம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் யாத்திரை இந்த ஆண்டு 43 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. காஷ்மீ்ர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று நடைபெற்ற அமர்நாத் கோயில் தேவஸ்தான வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் வழக்கமான … Read more

இந்தியாவில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து ஆயிரத்து 270 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில தொற்று பாதித்த 31 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 15,859 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா- மத்திய அரசு அறிவிப்பு

ஐதராபாத்: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. உள்நாட்டு விமான சேவை மட்டும் நடைபெற்றது. சர்வதேச விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது. இந்த வாரம் முழுக்க இந்தியாவில் சுமார் 3250 விமான சேவைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே … Read more

வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம்: வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

டெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று மற்றும் நாளை அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

'5 லட்சம் பேருக்கு இலவச விசா' – மத்திய அரசு முடிவு

5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை முழுவீச்சில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாத் துறையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று … Read more

யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானதால் உ.பி.யில் 50 கிரிமினல்கள் சரண்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஏராளமான கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிரிமினல்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உ.பி.யில் கிரிமினல்கள் ஆதிக்கம் குறைந்து சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பிரச்சாரம் செய்தது. தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகி உள்ளார். பாஜகவின் வெற்றிக்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு … Read more

கொரோனா காலர் டியூன் ரத்து? மத்திய அரசு எடுக்கும் முடிவு!

இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த 2020ஆம் ஆண்டு தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து தொலைபேசிகளிலும் விழிப்புணர்வு காலர் டியூன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த காலர் டியூனில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசை எதிர்த்து போராடுகிறது என தொடங்கி, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய முககவசம் அணிவது, சரீர விலகலை பின்பற்றுவது, … Read more

மேற்கு வங்கத்தில் இடதுசாரி தொழிற் சங்கத்தினர் ரயில் மறியல்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இந்த போராட்டத்தையொட்டி மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில்  இடதுசாரி தொழிற்சங்க உறுப்பினர்கள் தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் … Read more