சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் கும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார். இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் அமைப்பான பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டம் இலங்கையில் 30ஆம் தேதி நடைபெறுகிறது. காணொளி முறையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி முறையில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை செல்ல உள்ளார். பிம்ஸ்டெக் நாடுகள் அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மார், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்கலாம்: இன்றும் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 29-ம் தேதி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், உகாதிபண்டிகை, ஆனிவார ஆஸ்தானம்,பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்டஏகாதசி போன்ற விசேஷ நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க் கிழமை, கோயில் முழுவதும் பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், துளசி, தவனம் போன்ற வாசனை திரவியங்களால் கற்ப கிரகம் உட்பட உப சன்னதிகள், பலிபீடம், கொடிக் கம்பம், விமான கோபுரம், முகப்பு கோபுர வாசல் என அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்படும். இதுவே ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்’ என்றழைக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் 2-ம் … Read more

கார்னர் ஷாட் ஆயுதத்தின் சோதனை முயற்சிகள் வெற்றி.. முதற்கட்டமாக சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீசாருக்கு வழங்க திட்டம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கார்னர் ஷாட் ஆயுதம் விரைவில் சி.ஆர்.பி.எப். மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதம் தாக்குதல்களின் போது கட்டட மூலைகளில் மறையும் எதிரிகளை துல்லியமான வீடியோ முறையில் கண்காணித்து அதற்கேற்ற நிலையில் வளைந்து தாக்குதல் நடத்தக்கூடியது என்றும், இதனால் எதிரிகளின் திடீர் தாக்குதலை சமாளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை முயற்சிகள் வெற்றி … Read more

கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நாளை பதவி ஏற்பு- பிரதமர் மோடி பங்கேற்பு

பனாஜி: கோவா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்லில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கோவா மாநில முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக பதவி ஏற்கிறார். இதற்கான பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் … Read more

நல்ல ஆரோக்கியத்தை பெறுவதில் உலகை ஒன்றிணைக்கிறது யோகா: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவதில் உலகை ஒன்றிணைக்கிறது யோகா’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில், அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் 114 நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மகத்தான முயற்சியை பாராட்டுகிறேன். நல்ல உடல் ஆரோக்கத்தை பேணிக் காப்பதில் யோகா உலகையே ஒன்றிணைக்கிறது,’ … Read more

“இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது” – மோடி பெருமிதம்

இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது குறித்துப் மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில், நீர் நிலைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 87-வது மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த வாரத்தில் நாம் ஒரு … Read more

உ.பி. முதல்வர் யோகி அமைச்சரவையில் மறுவாய்ப்பு இழந்த 24 முன்னாள் அமைச்சர்கள்: 2024 மக்களவை தேர்தலை கருதி நடவடிக்கை

உ.பி.யில் 2-வது முறை முதல்வர் பதவியேற்ற ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் 52 அமைச் சர்களில் 31 புதிய முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலத் தில் பாஜக செல்வாக்குள்ள பகுதிகள் மற்றும் அனைத்து சமூகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிராமணர், தாக்குர் உள்ளடக்கிய உயர்குடிகள் 21, அதே எண்ணிக்கையில் ஓபிசி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் 8, பழங்குடி மற்றும் முஸ்லிம் பிரிவில் தலா ஒருவர் என அமைச்சர்களாகி உள்ளனர். இதன் பலன் பாஜக.வுக்கு உ.பி.யின் 80 தொகுதிகளுக்கான 2024 மக்களவை … Read more

மண உறவுக்குள் வல்லுறவு: மதங்களுக்கு எதிராக ஒரு தீர்ப்பு!

மனைவியுடன் ‘கட்டாய உடல் உறவு’ கொள்வதும் பாலியல் வன்கொடுமைதான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 பாலியல் வன்கொடுமையை அறிவிக்கிறது. அதன்படி ஒரு ஆண், பெண்ணின் விருப்பம் இல்லாமலும், அவளை மிரட்டியோ அல்லது அவளுக்கு வேண்டிய ஒருவரை எதாவது செய்து விடுவேன் என அச்சுறுத்தியோ, அவளுக்கு மயக்கம் வரவைத்தோ பாலியல் வன்கொடுமை செய்தால் அது குற்றமாகும். அதே நேரம், மனைவியை அவளது விருப்பத்துக்கு மாறாக உறவு கொண்டால் … Read more

கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர சுற்றுலாத் துறை சார்பில் கடலில் மிதவைப் பாலம் அமைப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப நெகிழும் தன்மையுள்ள மிதவைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் கோழிக்கோட்டில் பேப்பூர் கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பில் இந்த மிதவைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து சென்று அலைகளின் ஏற்ற இறக்கத்தை உணர்வது சுற்றுலாப் பயணிகளுக்குப் புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது. Source link