ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் ரூ.257 கோடி வசூலித்து சாதனை

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 257 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான அப்படம் ஏராளமான திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்நிலையில், இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலை குவித்துள்ள அப்படம், பாகுபாலி 2ஆம் பாகத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் 120 கோடி ரூபாயும், தமிழகத்தில் … Read more

புதுச்சேரி: பந்தல் சரிந்து விபத்து – 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

புதுச்சேரியில் கோவில் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். புதுச்சேரி பாரதி வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பந்தல் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மணி, அவரது மகன் வேலு, சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர் . அப்போது திடீரென பந்தல் சரிந்து … Read more

20 லட்சம் புதிய வேலைவாய்ப்பு, முதியோர் பென்ஷன்: டெல்லி ஆம் ஆத்மி அரசின் 8-வது ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்பு, 4.29 முதியோர்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்து 2-ம் முறையாக பதவி வகித்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக ஆம் ஆத்மி அரசு வரும் நிதியாண்டுக்கான (2022- 23) பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் … Read more

உ.பி.யில் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முதல்வராக 2ஆம் முறையாக பதவியேற்றுக்கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையில், லக்னோவில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்த இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில் அது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பேசிய யோகி ஆதித்யநாத், இலவச ரேசன் திட்டம் நீட்டிக்கப்படுவதன் மூலம் 15 கோடி … Read more

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை

டெல்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் வாரணாசிக்கும் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – டெல்லி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

தலைநகர் டெல்லியில் இன்று பட்ஜெட் தாக்கல் ஆனநிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து காணலாம். டெல்லிக்கான நிதிநிலை அறிக்கையை, அம்மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்தார். அப்போது டெல்லிக்கு என்று புதிய எலக்ட்ரானிக் நகரம் உருவாக்கப்படும் என்றும், ஸ்டார்ட் தப்புக்களுக்கான புதிய கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16,278 கோடி ரூபாய் கல்வித்துறைக்கு என்றும், 1300 கோடி ரூபாய் … Read more

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தடுக்க ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை: தமிழச்சி கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: அகால மரணங்களை ஏற்படுத்தும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் ஆரம்ப நிலையிலேயே இதய நோய்கள் தொடர்பான சோதனை நடத்தப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கமளித்தது. தமிழச்சி தங்கபாண்டியன் தனது கேள்வியில், ”தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு இஸ்கிமிக் இதய நோயால் பல … Read more

துபாயில் இருந்து இந்தியாவிற்கு, வாரத்துக்கு 170 விமானங்கள்.. எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், துபாயில் இருந்து இந்தியாவிற்கு வாரத்துக்கு 170 விமானங்களை இயக்கப்போவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை முதல் இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய காலத்தைப் போலவே, துபாயில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை உள்பட 9 நகரங்களுக்கு வாரந்தோறும் 170 விமான சேவைகளை இயக்கப்போவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை முதல், இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், கொரோனாவிற்கு முந்தைய காலத்தை போலவே, … Read more

உக்ரைனிலில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை நிறைவு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை மக்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வெளியிட்டுள்ளார். முன்னதாக, இப்பிரச்சனையில் திமுக எம்.பி கனிமொழி உள்பட சுமார் 50 எம்.பிக்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர். இவற்றுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி அளித்த விரிவானப் பதில் விவரம்: “ஏறத்தாழ 22, 500 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள் … Read more

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு?

இந்தியாவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் பரவும் கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில், மீண்டும் கொரோனா விஸ்வரூபமெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் … Read more