நிலக்கரி உரிமைத்தொகையைச் செலுத்தாவிட்டால் நிலக்கரி எடுக்கத் தடை-முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

பொதுத்துறையைச் சேர்ந்த நிலக்கரி நிறுவனங்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு இலட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை வழங்காவிட்டால், சுரங்கங்களை அரசே எடுத்துக் கொள்ளும் என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் சட்டப்பேரவையில் பேசிய அவர், மாநில அரசின் உரிமைத் தொகையைச் செலுத்தாவிட்டால், நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றித் தடுப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். இது குறித்து ஏற்கெனவே மத்திய நிலக்கரித்துறைக்குத் தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் அதிக அளவு நிலக்கரி வெட்டியெடுப்பதில் … Read more

கட்சி அமைப்புகளில் மாற்றம்- காங்கிரஸ் செயலாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை மீண்டும் விமர்சிக்க தொடங்கினர். சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதைத்தொடர்ந்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சோனியா ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் தேர்தல் குழுவை மாற்றிவிட்டு புதிய குழுவை … Read more

திடீரென உயர்ந்த கொரோனா இறப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4100 பேர் உயிரிழப்பு..! கணக்கை சரி செய்கிறதா ஒன்றிய அரசு

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.2 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,660 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032-ஆக உயர்ந்தது.* புதிதாக 4,100 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

பெட்ரோல் டீசல் விலைக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை – நிர்மலா சீதாராமன்

எரிபொருள் விலை உயர்வுக்கும் தேர்தல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பெட்ரோல் டீசல் மீது வரியை குறைத்து மக்கள் மீதான சுமையை மத்திய அரசு குறைத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் அவர் குறிப்பிட்டு, கொரியப் … Read more

யோகி அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்: தானீஷ் அன்சாரி பதவியின் பின்னணி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வராக நேற்று பதவியேற்ற யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் தானிஷ் ஆஸாத் அன்சாரி (34). இவர் பாஜகவில் அமைச்சராக்கப்பட்டதன் பின்னணியில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. உ.பி. மக்கள் தொகையில் 28 சதவீதம் இஸ்லாமியர்கள். இவர்களை பாஜக தவிர்க்கத் தொடங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது. வேறுவழியில்லாம் ஆங்காங்கே சில கட்டாயமான சூழலில் மட்டும் அவர்களுக்கு உரிய இடங்களில் மட்டுமே பாஜக முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தபாகக் கூறப்படுகிறது. இந்துத்துவா … Read more

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழவே கூடாதா?

கர்நாடக மாநிலத்தில் இந்து கோயில் திருவிழாக்களில், இஸ்லாமியர்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது ’ என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைக்கிறது. வழக்கமாக ஏப்ரல்-மே மாதங்களில் கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும். அப்போது அமைக்கப்படும் கடைகளில் கோடிக்கணக்கான ரூபாய் புரளும். வகுப்புவாதப் பதற்றம் இருந்தபோதும்கூட, கடந்த காலங்களில் இந்த திருவிழாக்கள் எந்தவொரு சமூகத்தின் வணிக வாய்ப்புகளையும் பாதித்தது இல்லை. (மிகச் சில விதிவிலக்குகள் உண்டு.) ஆனால், சமீபத்தில் கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் … Read more

பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தை இந்தியாவில் அமைக்க உடன்பாடு

குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தை அமைக்க இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகமும், உலக நலவாழ்வு அமைப்பும் உடன்பாடு செய்துள்ளன. இந்த மையத்தின் இடைக்கால அலுவலகம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை நோக்கம், அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவத் திறனைப் பயன்படுத்துவதும், உலகச் சமூகங்களின் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்துவதும் ஆகும். இது குறித்துப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், … Read more

திருப்பதியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.வி.பள்ளி, கர்னமிட்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தய்யா. இவரது மனைவி சரஸ்வதி. இத்தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 2-வது மகள் விஷ்ணுபிரியா (வயது 16). இவர் திருப்பதியில் உள்ள பத்மாவதி கல்லூரி விடுதியில் தங்கி இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் விஷ்ணுபிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விஷ்ணு பிரியாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு … Read more

ஏப்ரல் முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது.!

டெல்லி: ஏப்ரல் மாதம் முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டியராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகின்ற ஏப்ரல் மாதம் 1 தேதி  முதல் 10.7 சதவீதம் உயர்கிறது. இந்நிலையில் திட்டமிடப்பட்ட மருந்துகளில் … Read more

சத்தீஸ்கரில் அவலம்: இறந்த மகளின் உடலை 10 கி.மீ தொலைவிற்கு தூக்கிச் சென்ற தந்தை!

இறந்த மகளின் உடலை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு தந்தை தோளில் சுமந்து நடந்தே சென்ற வீடியோ கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஈஸ்வர் தாஸ். கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சலால் அந்த சிறுமியின் உடலில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. சுகாதார மருத்துவ … Read more