திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஷாக் கொடுத்த தேவஸ்தானம்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்த காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான அளவிலேயே நிபந்தனையுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம் என்று மத்திய அரசு … Read more

இந்தியாவில் புதிதாக 1,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்றே குறைந்து ஆயிரத்து 660 ஆக பதிவாகி உள்ளது. ஒரு நாள் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 100 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கொரோனாவுக்கு பிந்தைய உயிரிழப்புகளையும் சேர்த்து மகாராஷ்டிரா மாநிலம் புதிதாக 4005 உயிரிழப்புகளையும், கேரள மாநிலம் 79 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது. 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் … Read more

இந்தியாவில் புதிதாக 1,660 பேருக்கு தொற்று- கொரோனா பாதிப்பால் மேலும் 4,100 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 18 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. … Read more

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்ந்து வருகிறது; பிரதமர் நரேந்திர மோடி ட்விட்

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது … Read more

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4100 பேர் பலி! திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 4,100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,30,18,032 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,100 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் … Read more

ஆந்திராவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பார்க்க பைக்கில் சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

திருப்பதி: பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்களுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே, வி. கோட்டா – பேரணாம்பட்டு சாலையில் உள்ள பாப்பைய காரி பள்ளி எனும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு எதிரெதிரே வேகமாக வந்த இருமோட்டார் பைக்குகள் … Read more

யுனிடெக் முன்னாள் அதிகாரியின் மனைவி பிரீத்திக்கு நிபந்தனை பெயில்.!

யுனிடெக் முன்னாள் நிர்வாகியான சஞ்சய் சந்திராவின் மனைவி பிரீத்திக்கு கடுமையான நிபந்தனைகளுடன் 5 மணி நேர பெயில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் காலமான தமது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள அனுமதி கோரியிருந்த பிரீத்தியை பெயிலில் விட்டால் அவர் யுனிடெக் வழக்கின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் கண்காணிப்பில் மொபைல் போன் இல்லாமல், பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு ஜாமீனில் செல்ல நீதிமன்றம் பிரீத்தியை அனுமதித்தது. போலியான கம்பெனிகள் மூலமாக 410 … Read more

நல்ல ஆரோக்கியத்தை தொடர, யோகா உலகை ஒன்றிணைக்கிறது- பிரதமர் மோடி கருத்து

புது தில்லி: 114 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காக கத்தார் தலைநகர் தோகாவில் யோகா அமர்வை நடத்தியதற்காக அங்குள்ள இந்திய தூதரகத்தின் முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தோகாவில்  உள்ள இந்தியத் தூதரகத்தின் மகத்தான முயற்சியை பாராட்டுகிறேன். நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர யோகா உலகை ஒன்றிணைக்கிறது.  பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் … Read more

மார்ச்-25: பெட்ரோல் விலை ரூ.104.43, டீசல் விலை ரூ.94.47

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.43-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.47-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கேரள தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – பயணிகள் அவதி

கேரளாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி, கல்லூரி செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பல்வேறு இடங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க அரசு … Read more