உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச வரலாற்றில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் … Read more

கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு பரிசீலித்து வருகிறது – அமைச்சர் கிரண் ரிஜிஜு

கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி செய்யவும் அரசு பரிசீலித்து வருவதாக மத்தியச் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், தேர்தல் முறைகேடு ஒரு தீவிரமான விஷயம் என்றும், கள்ள வாக்கைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றி அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது கள்ள வாக்கைத் தடுக்கும் வழிகளில் ஒன்றாகும் என்றும், இதன் மூலம் ஒருவரின் … Read more

இனி அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கொண்டாடப்படும்- சுற்றுச்சூழல் அமைச்சர்

இந்தியாவில் அசாம், பீகார், ஜார்க்காண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீண்ட ஆழமான நதிப் பகுதிகளில் டால்பின்கள், நன்னீர் டால்பின் இனங்கள் காணப்படுகின்றன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இந்திய நதிகளில் சுமார் 3,700 டால்பின்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கொண்டாடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் … Read more

உத்திரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் யோகி ஆதித்யநாத்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். பதவியேற்பு விழா நடக்கும் மைதானத்தில் இருந்துதான் யோகி ஆதித்யநாத் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார். 

திருமலையில் ஏப்ரல் மாத விசேஷ தினங்கள் அறிவிப்பு

திருமலை: திருமலையில் வரும் ஏப்ரல் மாத விசேஷ தினங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 2-ம் தேதி தெலுங்கு உகாதி ஆஸ்தானம், 3-ம் தேதி மத்ஸய ஜெயந்தி, 10-ம் தேதி ஸ்ரீராம நவமி ஆஸ்தானம், 12-ம் தேதி சர்வ ஏகாதசி, 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம், 26-ம் தேதி பாஷ்யகாரர் (ராமானுஜர்) உற்சவம், 29-ம் தேதி மாத சிவராத்திரி, 30-ம் தேதி சர்வ அமா வாசை ஆகியவை … Read more

கேரளாவில் லாரி மோதியதால் நிலைதடுமாறி கவிழ்ந்த தனியார் பேருந்தின் சிசிடிவி காட்சி.!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே அதிவேகமாக வந்த லாரி தனியார் பேருந்தின் மீது மோதியதில், நிலைதடுமாறிய பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மஞ்சரியில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து, கொண்டோட்டி பகுதியில் சென்ற போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த லாரி, பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் நிலைதடுமாறிய பேருந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பேருந்து மோதிய வேகத்தில் … Read more

உ.பி அரசு முன்னேற்றத்தின் மற்றொரு புதிய அத்தியாயத்தை எழுதும்- பிரதமர் மோடி

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யநாத் நேற்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட மெகா விழாவில் யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது முறையாக உ.பி முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, … Read more

5 மாநில தோல்வி எதிரொலி குஜராத் தேர்தலுக்கு தயாராகும் காங்.: பிரசாந்த் கிஷோரை களம் இறக்க முடிவு?

புதுடெல்லி: குஜராத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகும் நிலையில், பிரசாந்த் கிஷோரை களம் இறக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தல் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தலுக்கு வியூகங்களை வகுக்கும் வேலையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. … Read more

சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி

போர்ட்பிளேர்: இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை களை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கி கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். உலகின் அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் … Read more

பார்லி.யில் கதறி அழுத பாஜக பெண் எம்பி – காரணம் இது தான்!

மேற்கு வங்க மாநிலத்தில், சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ரூபா கங்குலி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். … Read more