உ.பி. | கைப்பேசியை பறித்த குரங்கை விரட்டிய போலீஸ் படை; 3 கி.மீ. 'தண்ணீர் காட்டிய' பின் தூக்கியெறிந்த சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அதிக எண்ணிக்கையில் உள்ள குரங்குகள் பல்வேறு தொல்லைகளை பொதுமக்களுக்கு அளிப்பது வழக்கமாகி விட்டது. தனக்கு கிடைக்காத உணவினால், இவ்வாறு செய்யும் குரங்குகள் தற்போது கைப்பேசிகளை பிடுங்கத் தொடங்கிவிட்டன. பாக்பத் காவல் நிலையத்தில் ஒரு போலீஸிடம் கைப்பேசியை பறித்தது ஒரு குரங்கு. இதை மீட்க போலீஸ் படை, சுமார் மூன்று கி.மீ தூரம் விரட்டிய பின், தூக்கி எறிந்துச் சென்றது குரங்கு. பாக்பத்தின் பினவுலி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் தேவேந்திர குமார் பின்புறப்பகுதியில் … Read more

கணவனை கட்டி வைத்து.. மனைவி கேங் ரேப்.. யோகி பதவியேற்பு நாளன்று உ.பியில் ஷாக்!

உத்தரப் பிரதேச முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கும் நிலையில் அங்கு அதிர்ச்சிகரமான ஒரு பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து விட்டு, மனைவியை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 10 பேரை கைது செய்துள்ளனர். அதில், சிலர் சிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சியாகும். புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் … Read more

முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு டி.சி கொடுத்த வில்லங்க பள்ளி..! அரசியல் பிரமுகர் மகளுக்காக அத்துமீறல்..!

ஆளும் கட்சி பிரமுகரின் மகள் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக பள்ளியின் முதல் மதிப்பெண் மாணவிக்கு டிசி வழங்கிய தலைமை ஆசிரியரின் பாரபட்சமான செயலால் அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் சித்தூர் அருகே அரங்கேறி உள்ளது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி பகுதியில் பிரம்மர்ஷி என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மிஸ்பா படிப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று வந்தார். இதே வகுப்பில் … Read more

மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு உருவாக்க 'மஹா யுவா' செயலி அறிமுகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு வேலைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் செயலி ஒன்றை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. விதான் பவன் கமிட்டி ஹாலில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ‘மஹா யுவா’ என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களான சுபாஷ் தேசாய், அனில் பராப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த செயலியில், மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தகவல்கள் இருக்கும். பட்டதாரி ஒருவர் ஆப்பின் உள்ளே சென்று தனது சுயவிவரத்தை பதிவு செய்ய வேண்டும் … Read more

எல்லையில் படைவிலக்கல் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது: ஜெய்சங்கர் பேட்டி

டெல்லி: எல்லையில் படைவிலக்கல் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தது என்று ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீயுடனான பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்தார். எல்லையில் படைவிலக்கல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். சீனாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்களின் கவலைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

நிஜமானது வேட்டைக்காரனின் கனவு! காவலர் தேர்வில் வென்று ஆட்டோ ஓட்டும் இளைஞர் அசத்தல்!

புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில், ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளார். புதுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்த கந்தன் என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில்,  புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதும், எப்படியாவது தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதால், … Read more

பிஹாரில் விஐபி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ.க்களும் பாஜக.வில் இணைந்தனர்

பாட்னா: பிஹார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகிக்கிறார். 74 இடங்களுடன் பாஜக. இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியில் (விஐபி) 3 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி மாநில அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், விஐபி கட்சியின் ராஜு குமார் சிங், … Read more

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ நேற்றிரவு டெல்லிக்கு வந்தார். இன்று அவர் சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நிலையிலான பேச்சும் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது லடாக்கில் எல்லைக் … Read more

குடிபோதையில் தகராறு: அண்ணனை கழுத்தை நெரித்து கொன்று புதைத்த வாலிபர்

கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாபு(வயது26). தொழிலாளி.இவர் தனது தாய் மற்றும் தம்பி ஷாபு(23) ஆகியோருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாபுவை காணவில்லை. இதையடுத்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சேர்ப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தேடி வந்தனர். நேற்று காலை பாபுவின் வீட்டு வழியாக நடந்து சென்ற சிலர், கை ஒன்று தெரிவதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். … Read more

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் தகவல் தெரிவித்திருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் தொடங்கும் எனவும் ஒன்றிய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.