ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசாரணை 3 ஆண்டுகளாக முடக்கம்: எதிர்க்கட்சி ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் 5 மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காததால் ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளில் சிபிஐ விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு திருப்பி கட்டாமல் மோசடியில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சில முக்கிய வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப் படுகிறது. இதுகுறித்து மாநிலங் களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்துள்ள பதில் வருமாறு: பாஜக … Read more

உடல்நலக் கோளாறால் பாதித்து நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமி மீட்பு

கொச்சி கடற்பகுதியில் உடல்நலக் கோளாறால் பாதித்து நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொச்சி கடற்பகுதியில் பயணித்த கிராண்ட் நெப்டியூன் என்ற சரக்கு கப்பலில் இருந்து அவசர மருத்துவ உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து கேரள மற்றும் மாஹே கடலோர காவல் படையினர் கூட்டாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உதவி கோரிய கப்பல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு அதிலிருந்து உடல் நலன் பாதித்த மாலுமி இழுவைக் கப்பல் மூலம் மீட்கப்பட்டார்.   … Read more

நிர்வாண வீடியோவை காட்டி 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்- குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தூர் அடுத்த எல்ல குண்டல பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). எலக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காலை சிறுமி பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியில் இருந்து வெளியே வந்த சிறுமியிடம் சென்ற ராஜேஷ் உன்னுடைய பெற்றோர் உன்னை அழைத்து … Read more

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலோசனை

டெல்லி: இன்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை  சந்தித்தது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 2020-ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே எல்லையில் நிலவி வந்த பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள், எல்லையில் உள்ள … Read more

இந்தியா வந்தடைந்தார் சீன வெளியுறவு அமைச்சர்: அமைச்சர் ஜெய்சங்கருடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று இந்தியா வந்தார். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை இன்று அவர் சந்தித்துப் பேசுகிறார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெற்காசிய நாடுகளில்சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நேற்றுஇரவு அவர் டெல்லி வந்தடைந்தார். இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, இருதரப்பு உறவுகள் லடாக்கில் இரு நாடுகளின் … Read more

The Kashmir files: பேசாம யூடியூப்ல போடுங்களேன்.. மோடியைக் கலாய்த்த கெஜ்ரிவால்!

காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு வரி விலக்குக் கொடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான தேவை என்ன இப்போது வந்திருக்கு. அந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்றால் பேசாமல் யூடியூபில் போட்டு விடுங்களேன்.. என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி சட்டசபையில் அவர் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். அவரது கடுமையான விமர்சனத்துக்கு பாஜக தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்துள்ளது. காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பாக பாஜகவினர் நாடகமாடுவதாகவும், ஜெர்மனி நாட்டு … Read more

இந்தியாவில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து ஆயிரத்து 685 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 83 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 24 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 21 ஆயிரத்து 530 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.   Source link

கேரளாவில் கே ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்- ரெயில்வே மந்திரி தகவலால் பினராயி விஜயன் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு,சில்வர்லைன் எனப்படும் கே ரெயில் அதிவேக ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த வைக்கப்பட்ட எல்லை கற்களையும் அகற்றினர். இதனால் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை … Read more

கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு சொந்தமான செயல்பாடுகளை கண்காணிக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு சொந்தமான நிலம், சொத்து, செயல்பாடுகளை கண்காணிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர் k.k.ரமேஷ்க்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது.   

மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக்கொலை: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் 8 பேர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் திங்கட்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். பிர்பும் … Read more