ஆளும் கட்சி பிரமுகரின் மகள் முதல் மதிப்பெண் பெற பள்ளியின் முதல் மாணவிக்கு டிசி வழங்கியதால் தற்கொலை: ஆந்திராவில் அக்கிரமம்

திருமலை: ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில்  பிரம்மர்ஷி பள்ளியில் மாணவி மிஸ்பா 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிப்பில் முதல் மாணவியாக இருந்தார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  சுனில்  மகள் பூஜிதா. இவர் அனைத்து தேர்விலும் 2ம் இடத்திற்கு சென்றார். இதனால்,  மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்து தலைமை ஆசிரியர் ரமேஷ் மூலம் டிசி வழங்கி உள்ளார். இதனால், மனமுடைந்த மிஸ்பா, உருக்கமான கடிதம் எழுதி வைத்து நேற்று … Read more

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான்

புதுடெல்லி: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார்.   இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பகவந்த் மான் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுகுறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, … Read more

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு ஒத்துழைக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை உடனே நாடலாம்: தமிழக அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு நேற்றும் 2வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘முல்லை பெரியாறு அணையில் தமிழகம் 152 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம் என்ற அனுமதியுடன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை கேரள அரசு பொருட்படுத்தவில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசு எதை செய்வது என்றாலும் கேரள காவல் எல்லைக்குள் சென்றுதான் … Read more

உ..பி. யில் நாளை பிரம்மாண்ட விழா… மோடி பங்கேற்பு!

அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றது. இதனையடுத்து முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் லக்னௌவில் இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதா தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே அவர் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து … Read more

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் :உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, முல்லை பெரியாறு அணை தொடர்பான மேற்பார்வைக் குழுவை தொழில்நுட்பக் குழுவாக … Read more

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு!: கண்கவர் மலர்களை காண படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தலைநகரில் தால் ஏரியை ஒட்டியுள்ள இந்திராகாந்தி நினைவு துலிப் மலர்த்தோட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டமாகும். 74 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தோட்டத்தில் பல வண்ணங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் வசந்தகாலத்தை ஒட்டி துலிப் மலர்த்தோட்டம் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் ஏ.கே.மேத்தா, … Read more

“சாக்குபோக்கு கூடாது; யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள்” – மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு போலீசாருக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாது ஷேக். திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியான இவர், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்புர்ஹாட் கிராமத்தில் நேற்று திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் … Read more

'இந்த வன்முறை ஒரு பெரிய சதி' – பிர்பும் கிராமத்தில் அதிரடி காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பிர்பும்: ‘பிர்பும் வன்முறை ஒரு பெரிய சதி’ எனக் கூறியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘காவல்துறை அனைத்துக் கோணங்களிலும் இந்த வழக்கை விசாரிக்கும்’ என்று தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிர்பும் கிராமத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை சென்றார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மம்தா, ‘கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார். அவர்களுக்கு நிவாரணத் … Read more

உ.பி. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் முதலமைச்சராக இருப்பவர் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளை வென்று பாஜக ஆட்சியை தக்க வைத்தது. நாளை மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி, … Read more

சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?: தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

டெல்லி: சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். பாரம்பரிய, பூர்வீக கலைகள், கைவினை பொருட்களை உலக சந்தையில் காட்சிப்படுத்தி விற்பனை அதிகரிக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து மக்களவை எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.