உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் அமல்: முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் … Read more

உயிரைக் குடிக்கும் காற்று மாசு!

உலக அளவில் காற்று மாசு அதிகமாக உள்ள 100 நகரங்களில், 63 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம் பூமியில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டபோது கூறப்பட்ட தகவல்தான் இது. காற்று மாசுவின் ஆபத்து காற்று மாசு காரணமாக நமது நாட்டில் 16.7 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அதுவும் ஒரே ஆண்டில்! இது 2019ஆம் … Read more

உ.பி. முதல்வராக நாளை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடி பங்கேற்பு

லக்னோ: உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது.  முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்,  சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்வர்) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். யோகி ஆதித்யநாத் பதவியேற்பு … Read more

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 6 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் மட்டுமே நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்… தடபுடலாக நடக்கும் ஏற்பாடு

உத்தரப் பிரதேசத்தில் நாளை பிரம்மாண்டமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா நடைபெற நிலையில், அதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் லக்னோவில் … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீடு | 'பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்' – உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவங்களில் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு விதித்திருந்த தடையை உறுதி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அடுத்த வாரத்தில் விசாரிக்க … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… லாக்டவுன் அச்சத்தில் நாட்டு மக்கள்!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி 1,549 ஆக இருந்தது. இதனையடுத்து கொரோனா கட்டுப்ாடுகளை மாநிலங்கள் முழுமையாக தளர்த்தி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மாரச் 22 ஆம் தேதி 1,581 ஆக இருந்த கொரோனா மொத்த பாதிப்பு நேற்று 1,778 ஆக அதிகரித்தது. இ|ந்த எண்ணி்க்கை இன்று மேலும் அதிகரித்து 1,938 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இன்று … Read more

பிரதமர் நரேந்திர மோடியுடன் பஞ்சாப் முதலமைச்சர் சந்திப்பு

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்றபின் பகவந்த் மான் முதன்முறையாகப் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பஞ்சாபின் நிதிநிலையை வலுப்படுத்த ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியை வழங்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். Source link

மக்கள், கொரோனா நோயாளிகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை- ராகுல் காந்தி

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகள் இலவச சிகிச்சை பெறவில்லை என்ற செய்தியை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- மக்கள், தொழிலாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை. … Read more

மேகதாது: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிராக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.