தி காஷ்மீர் ஃபைல்ஸ் | இந்து கடவுள்களை அவமதித்தாக தலித் வங்கி அலுவலர் மீது கடும் தாக்குதல்: 7 பேர் கைது

புதுடெல்லி: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சித்ததுடன் இந்துக் கடவுள்களைக் குறிப்பிட்டு அவமதித்தாக, ராஜஸ்தானில் ஒரு தலித் வங்கி அலுவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரை கோயிலுக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்து வன்செயலில் ஈடுபட்டது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பெரிய சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. இதை விமர்சித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ராஜஸ்தானின் ராஜேஷ்குமார் மெக்வால் என்ற … Read more

இந்தியாவில் புதிதாக 1,938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 938 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 67 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 531 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 29 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 22 ஆயிரத்து 427 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் சந்திப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கேரளாவின் தொழில்துறை முன்னேற்றத்திற்காக கொச்சி- பெங்களூரு தொழில் வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை வேகமாக முன்னேறி வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்காக மாநில அரசு தற்போதைய சந்தை விலையைவிட நான்கு மடங்கு … Read more

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கில் அவசர விசாரணை நடத்த முடியாது; உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லுமென்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது … Read more

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா? – சீனா கருத்துக்கு இந்தியா ஆட்சேபனை

ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தானில் நடந்த கூட்டத்தில் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்த கருத்துக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் மூன்றாவது நாடுகள் தலையிடக் கூடாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, பாகிஸ்தானின் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியாவை சுட்டிக்காட்டி பேசியிருப்பதை ஒருபோதும் … Read more

உள்ளூர் டேட்டா சென்டர்களுக்கு மானியங்கள் வழங்கும் யோசனை இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: தரவு மையங்கள் அமைக்க மானியம் வழங்கும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதை அவர், மக்களவையின் திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பியான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ”நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவாக்கும் வகையில் உள்ளூர் தரவு மையங்கள் (டொமஸ்டிக் டேட்டா சென்டர்ஸ்) ஏற்படுத்துவதை ஊக்குவிக்க … Read more

ரஷ்யா வீழ்ந்தால்.. இந்தியா சீனா அமெரிக்கா கை கோர்க்குமா?.. சாமி எழுப்பும் கேள்வி!

உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யா வீழ்த்தப்பட்டால், சீனா, அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா புதிய கூட்டணியை அமைக்குமா என்று சுப்பிரமணியம் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் மீதான போரை இப்போதைக்கு ரஷ்யா நிறுத்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தப் போருக்குப் பின்னர் என்ன மாதிரியான சூழல் ஏற்படும் என்பது குறித்து உலக நாடுகளிடையே விவாதம் கிளம்ப ஆரம்பித்துள்ளது. உக்ரைன் வீழ்த்தப்படும், அந்த நாட்டை தரைமட்டமாக்கி விட்டு முழுமையாக ரஷ்யா கைப்பற்றி விடும் என்று … Read more

ராஞ்சி கிரிக்கெட் அரங்கின் கூரை முழுவதும் 1200 சோலார் பேனல்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டரங்கம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வசதியைப் பெற்றுள்ளது. ராஞ்சி கிரிக்கெட் விளையாட்டு அரங்கின் கூரைகளில் சூரிய ஒளிமின்னுற்பத்திக்கான 1200 பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றால் 400 கிலோவாட் மின்னுற்பத்தி செய்து அரங்கத்தின் மின்தேவையை நிறைவு செய்வதுடன், கார்பன் வெளிப்பாட்டைக் குறைக்க முடியும் என இதைப் பார்வையிட்ட ஜெர்மன் தூதர் வால்டர் லிண்ட்னர் தெரிவித்துள்ளார். Source link

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தை தூண்டியதாக உமர் காலித் கைது செய்யப்பட்டார்.

தேர்வுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஹிஜாப் தொடர்பான மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

கர்நாடக மாநிலத்தில் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்தது. தொடர்ந்து போராட்டமாக அது வெடித்தது. இது தொடர்பாக அந்த மாநிலத்தில் சூழல் கையை மீறி சென்ற காரணத்தால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சொல்லியிருந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் மறு … Read more