ஆபாச படங்களுக்கு அடிமையான குழந்தைகளை மீட்க டிஜிட்டல் டீ-அடிக்‌ஷன் சென்டர்

ஆன்லைன் கேம்கள் மற்றும் ஆபாசப் படங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்கும் முயற்சியில் ஒருகட்டமாக கேரள காவல்துறை மாநிலம் முழுவதும் டிஜிட்டல் டி-அடிக்ஷன் மையங்களை அமைக்கவுள்ளது. சமீபகாலமாக ஆபாச படங்கள் மற்றும் ஆன்லைன் கேம்களுக்கு பல குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். அம்மாதிரியான குழந்தைகளுக்கு உதவ, டி-டாட் என்ற டிஜிட்டல் டி-அடிக்ஷன் சென்டர்களை (Digital de-addiction center) கேரள காவல்துறை அமைக்கவுள்ளது. இந்த திட்டம் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக காவல்துறை சமர்ப்பித்த … Read more

பேருந்தில் இருந்து இறங்கிய பெண், அதே பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் : ஓரு நொடி ஒதுங்கி நிற்காததால், நடந்த விபரீதம்

ஐதராபாத்தில், பேருந்தை விட்டு கீழே இறங்கிய பெண், ஒருசில நொடிகள் கூட ஒதுங்கி நிற்காமல், பேருந்தின் முன்புறத்தை ஒட்டியவாறு சாலையை கடக்க முயன்ற நிலையில், அதே பேருந்து மோதி, உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. அப்சல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தின் முன்படிக்கட்டு வழியாக பெண்மணி கீழே இறங்கியுள்ளார். அவர், சாலையை கடக்க விரும்பினால், உடனடியாக, தனது இடதுபுறத்தில், சாலை ஓரம் ஒதுங்கி நின்று, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் … Read more

அசத்தும் நவீன் பட்நாயக் அரசு… நாட்டிலேயே ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவு

புவனேஸ்வர்: நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு செப்டம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் உள்ள நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலமாக, நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநிலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.47 சதவிதமாகவும், மாநிலத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.96 சதவீதமாகவும் உள்ளது.  வேலைவாய்ப்புன்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக அரியானா (25.7 சதவீதம்) உள்ளது. … Read more

அந்தமான் நிகோபார் தீவில் நடத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய பாதுகாப்புத்துறை தகவல்

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவில் நடத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. நிலத்திலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை நிலத்திலுள்ள குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. ஒன்பது மீட்டர் நீளமுள்ள ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் 300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை  இன்று  அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட … Read more

'கலாச்சார அடையாளங்களை அழிக்கிறது ரயில்வே' – மாநிலங்களவையில் கனிமொழி சோமு விளாசல்

புதுடெல்லி: “ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே என்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதி தானே தவிர, அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்ல” என்று தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியுள்ளார். மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு கலந்து கொண்டு பேசினார். அவர் தனது பேச்சில், “சில பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை பற்றி மட்டும் … Read more

பேருந்து அடியில் சிக்கிய கார்… உடல் நசுங்கிய மாணவர்கள்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரை நோக்கி அரசு பேருந்தும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தன. மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் பேலூர் வித்யா விகாஸ் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த … Read more

பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது இந்திய பாதுகாப்புத்துறை

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை  வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அந்தமான் நிகோபாரில் நடைபெற்ற இந்த பரிசோதனையில் மிக துல்லியமாக இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானப் படை தளபதி விஆர் சவுத்திரி இந்த பரிசோதனையை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு, அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  Source link

உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதித்த இந்தியா-கிரீஸ் வெளியுறவு மந்திரிகள்

புதுடெல்லி: கிரீஸ் வெளியுறவு மந்திரி நிகோஸ் டென்டியாஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளா. அவர் டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்தனர். மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தியா-கிரீஸ் நாடுகளிடையே உள்ள நட்புறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் அகதிகளாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு வெளியேறுவது, சுதந்திரமாக நடமாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் இது குறித்த பிரகடனத்தில் இரு … Read more

பிர்பும் வன்முறை; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்; அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என உறுதி

டெல்லி: பிர்பும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை  பிரதமர் மோடி தெரிவித்தார். வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கூறினார். குற்றவாளிகளை கைது செய்ய மேற்கு வங்க அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க ஒன்றிய அரசு தயார். மாநில அரசு உரிய  நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களையும் மன்னிக்கக் கூடாது எனவும் கூறினார்.  மேற்கு வங்காள மாநிலம்  பிர்பும் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் … Read more

திரையரங்குகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் ஒலிக்கிறது – மெகபூபா முஃப்தி கவலை

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் ஒலிக்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இந்தக் கதைக்களத்தை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள … Read more