உடல்நிலை மோசம் அடைந்ததால் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார் லாலு

ராஞ்சி: ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவர் நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டார். பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்க்கண்ட்டின் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் (ஆர்ஐஎம்எஸ்) அனுமதிக்கப்பட்டிருந்தார். லாலுவுக்கு சிறுநீரக … Read more

தேர்தல் முடிந்ததும் தன் வேலையை காட்டிய மோடி அரசு… செம கடுப்பில் பப்ளிக்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இருந்து வந்தது. இந்த வழிமுறையையே 2014 இல் ஆட்சியமைத்த மோடி தலைமையிலான மத்திய அரசும் பின்பற்றி வந்தது. 2017 மே மாதம் வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து எரிபபொருட்களின் விலை மாதம் இருமுறை என்பதற்கு பதிலாக, அன்றாடம் … Read more

உத்தரக்கண்ட் முதலமைச்சராகப் புஷ்கர் சிங் தாமி இரண்டாம் முறை பதவியேற்பு

உத்தரக்கண்ட் முதலமைச்சராகப் புஷ்கர் சிங் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். உத்தரக்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இன்று டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். … Read more

புல்லட் ரெயில் திட்டத்திற்கு 89 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர்

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக இன்று அளித்த பதிலில் ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:- மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் செயல்படுத்துவது தாகதமாகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பதில் தாமதம் மற்றும் கொரோனா தொற்றின் பாதகமான தாக்கம் ஆகியவற்றால் தாமதமானது. புல்லட் ரெயில் திட்டத்திற்குத் தேவையான 1,396 ஏக்கர் நிலத்தில், சுமார் 89 சதவீதம் அதாவது 1,248 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் … Read more

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த கவுன்சிலருக்கு பால் அபிஷேகம் செய்த தொண்டர்கள்

டெல்லியில் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் பால் அபிஷேகம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விரைவில் டெல்லியில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களை செய்வது வழக்கம். அதுபோல ஒரு சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரால் டெல்லி … Read more

காஷ்மீர் பண்டிட்களின் வலியை ஆயுதமாக்குவது உள்நோக்கம் கொண்டது: மெகபூபா கடும் சாடல்

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விளம்பரப்படுத்தும் நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏதாவது செய்திருந்தால் இன்று அவர்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு … Read more

'அரசியலை விட்டு விலகுவேன்!' – அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி!

டெல்லியில் மாநகராட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்தி பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) அரசியலை விட்டு வெளியேறுகிறோம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். கடந்த 2011 ஆண் ஆண்டு, டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை, நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, … Read more

நடப்பாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 40,000 கோடி டாலரை எட்டியது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டாலர் என்னும் அளவை எட்டியுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை எட்டியதற்கு விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பொருட்கள் தயாரித்துத் தன்னிறைவு பெறும் திட்டத்தில் இது குறிப்பிடத் தக்க மைல்கல்லாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டுள்ளதற்கு 9 நாட்களுக்கு முன் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முந்தைய நிதியாண்டில் 29 ஆயிரத்து 200 கோடி டாலர் … Read more

ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்

திருவனந்தபுரம்: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வுபெறும் நாளில் சக ஊழியர்களால் பிரிவு உபசார விழா நடப்பது வழக்கம். இத்தகைய விழாக்களில் ஓய்வு பெறும் நபரின் சிறப்புகளை பேசி பொன்னாடை அணிவித்து அவரை வழியனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பேராசிரியைக்கு சக ஊழியர்கள் நடத்திய பிரிவு உபசார விழா சமூகவலை தளத்தில் பரவி பாராட்டை குவித்து வருகிறது. அதன்விபரம் வருமாறு:- எர்ணாகுளம் தனியார் கல்லூரியில் பணியாற்றி … Read more