10 நிமிடத்தில் டெலிவரி: இந்த வேகம் தேவையா?

வேகம் இல்லா வாழ்க்கை வீண் என்ற முடிவுக்கு நாம் எப்போதோ வந்துவிட்டோம். அதனால், எங்கும் வேகம் எதிலும் வேகம் என்றிருக்காவிட்டால் அஃறிணையை போல உற்றுநோக்குவதைத் தவிர்க்க முடியாத சூழல். மென்மேலும் வேகம் என்றிருப்பது மட்டுமே இலக்கு என்றாகிவிட்ட நிலையில், சந்தைப்படுத்துதல் உத்திகளிலும் அது ஒன்றாகிப் போனதில் ஆச்சரியமில்லை. ஆனால், அதன் பின்விளைவுகளை யோசிக்க வேண்டாமா என்று கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது ஸொமோட்டோ நிறுவனத்தின் ’10 நிமிடத்தில் டெலிவரி’ அறிவிப்பு. ஏற்கனவே மருந்துப் பொருட்களை 10 நிமிடத்தில் டெலிவரி செய்கிறோம் … Read more

காஷ்மீர் பற்றியெரியும்போது பரூக் அப்துல்லா லண்டனுக்குச் சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

காஷ்மீர் பற்றியெரியும்போது பரூக் அப்துல்லா லண்டனுக்குச் சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார். வன்முறையால் காஷ்மீரைவிட்டுப் பண்டிட்கள் வெளியேறியது குறித்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துக் கூறிய பரூக் அப்துல்லா, ஹிட்லரும் கோயபல்சும் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பியது போல், இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்த பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், யார் தவறு செய்தார் என்பது … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில வாரங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்துது. அதன் பிறகு கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான கட்டுப்பாடுகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை … Read more

பீர்பூம் வன்முறையால் 10 பேர் பலி எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு: மம்தா பதவி விலக பாஜக, காங். வலியுறுத்தல்

கொல்கத்தா: பீர்பூம் வன்முறையால் 10 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை எஸ்ஐடி விசாரணைக்கு மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மம்தா பதவி விலக வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. மேற்குவங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. மாவட்டத்தின் பல கிராமங்களில் தீவைப்பு  சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் 10 பேர் எரித்து கொல்லப்பட்டதால், மாநில அரசியலில் பெரும் … Read more

"2023ஆம் ஆண்டிற்குள் யமுனா நதி தூய்மைபடுத்தப்படும்"- உறுதியளித்த டெல்லி அமைச்சர்

2023ஆம் ஆண்டிற்குள் யமுனை நதி முழுவதுமாக சுத்தம் செய்யப்படும் என டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கழிவுகள் கலப்பதாலும், ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளாலும், யமுனைநதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கழிவுநீர் அனைத்தும் ஒரே இடத்தில் சேரும் வகையில் அடுத்த எட்டு மாதங்களுக்குள் கட்டமைப்பை உருவாக்க உள்ளதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக 2025ஆம் ஆண்டிற்குள் யமுனை நதி தூய்மைபடுத்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் … Read more

உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பதவியேற்பு: விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

டேராடூன்: உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் இன்று பதவியேற்று கொண்டார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், கதிமா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் தோல்வியை தழுவியபோதிலும் பாஜக பெற்ற … Read more

பயிர்களை குரங்குகள் சேதப்படுத்துவதால் கரடி வேடமணிந்து விளைநிலத்தை பாதுகாத்து வரும் விவசாயி

தெலங்கானாவில், குரங்குகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற விவசாயி ஒருவர் கரடி வேடமணிந்து விளைநிலத்தில் காவல் காத்து வருகிறார். சித்தி பேட்டா மாவட்டம் நாக சமுத்திரத்தை சேர்ந்த பென்சில் ஐயா என்பவர், 10 ஏக்கர் விளை நிலத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், குரங்குகள் அவ்வபோது பயிர்களை சேதப்படுத்தியதால், இழப்பு ஏற்பட்டதாக கூறும் பென்சில் ஐயா, தினமும் கரடி போல் வேடமணிந்துக்கொண்டு விளை நிலத்தை பாதுகாத்து வருகிறார். Source link

உ.பி.யில் ஸ்வீட் சாப்பிட்ட 4 குழந்தைகள் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

குஷிநகர்: குஷிநகர் மாவட்டம் திலிப்நகர் கிராமத்தில் முகியா தேவி என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்தபோது ஒரு பிளாஸ்டிக் பையில் டோஃபி (இனிப்பு) இருந்ததை கவனித்துள்ளார். அதை தனது பேரப்பிள்ளைகள் 3 பேர் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தை என 4 பேருக்கும் கொடுத்துள்ளார். அந்த இனிப்பை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்துவிட்டனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், 4 குழந்தைளும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் … Read more

திருப்பதியில் ஏப்.1 முதல் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

சித்தூர்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் கடந்த 2020 மார்ச் 20-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம், அஷ்டலபாத ஆராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த ஒரு பகுதியாக … Read more

“அது மட்டும் நடந்தால் ஆம் ஆத்மி அரசியலில் இருந்தே விலகும்”- அர்விந்த் கெஜ்ரிவால்

“டெல்லி நகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அரசியலில் இருந்தே ஆம் ஆத்மி விலகிவிடும்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் தெற்கு, வடக்கு, மேற்கு என மூன்று நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளுக்கான தேர்தலை மத்திய அரசு தொடர்ந்து ஒத்தி வைத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மேற்குறிப்பிட்ட மூன்று நகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லி நகராட்சித் தேர்தலை … Read more