மார்ச் 31-ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி- மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புக்காக முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் … Read more

உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு..!!: விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் பங்கேற்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். ஆளுநர் குர்மீத் சிங் புஷ்கர் சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோவா முதல்வர் பிரமோத் தவான், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், அரியானா மாநில முதல்வர் உட்பட பல்வேறு மாநில … Read more

முதல் சுற்றிலேயே 200 மில்லியன் டாலர் திரட்டி இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் சாதனை

கல்ரா மற்றும் ஆசிஷ் மோகபத்ரா தம்பதியரின் 2வது ஸ்டார்ட்-அப் நிறுவனமான Oxyzo Financial Services முதல் சுற்றிலேயே 200 மில்லியன் டாலர் நிதியை திரட்டி சாதனை படைத்து யுனிகார்ன் கிளப்பில் நுழைந்துள்ளது. கல்ரா, லாபகரமான ஃபின்டெக் யூனிகார்னின் இந்திய பெண் நிறுவனர்களில் ஒருவர். மேலும் இவரது கணவர் ஆசிஷ் மோகபத்ராவுடன் இணைந்து இரண்டு யூனிகார்ன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஏற்கெனவே ஆஃப் பிசினஸ் (OfBusiness) எனும் கடன் வழங்கும் தளத்தை துவங்கினர். உற்பத்தி மற்றும் துணை ஒப்பந்தம் … Read more

‘மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது கடமை’

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்தியர்கள் அனைவரின் சட்டபூர்வமான கடமை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் மக்களவையில் தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் நேற்று அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்புமற்றும் தேசிய மக்கள் தொகைபதிவேடு விவரங்களை கணக்கெடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகை சட்டம்1948-ன் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள அல்லது மேற்பார்வை செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை மாநில … Read more

கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் – மத்திய அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி பிறப்பித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா கடிதத்தில் இதைத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பில் முன்னேற்றம், தொற்றைக் கட்டுப்படுத்த அரசின் தயார்நிலை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் முகக் கவசம் அணிதல், கைகளைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகிய கொரோனா தடுப்புக்கான அறிவுரைகள் தொடரும் … Read more

உடல் தகுதியுடன் உள்ளார்: லாலுவை விடியற்காலையில் டிஸ்சார்ஜ் செய்தது எய்ம்ஸ் மருத்துவமனை

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை நேற்று மோசமடைந்தததை அடுத்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (ஆர்ஐஎம்எஸ்) இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் தீவிர அவசரப் பிரிவில் இரவு முழுவதும் கண்காணிக்கப்பட்டார்.  இதையடுத்து, லாலுவுக்கு பரிசோதனை செய்தபோது அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “லாலு பிரசாத் … Read more

தியாகிகள் தினத்தையொட்டி பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி

டெல்லி : தியாகிகள் தினத்தையொட்டி பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.சுதந்திரப் போராட்ட காலத்தின்போது தீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிட்டனர். அந்த தினத்தையும் தியாகிகள் தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த தியாகிகள் தினமான இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியத் தாயின் அழியாப் … Read more

கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் – ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல்

கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் அண்மையில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது இதையும் … Read more

க்ளாடியேட்டர் போல் 'மோடி… மோடி…' கோஷத்துக்கு மத்தியில் நாடாளுமன்றம் நுழைகிறார் பிரதமர் – மஹுவா மொய்த்ரா விமர்சனம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துப் பேசினார். ரோம் நகர பெரும் விளையாட்டுத் திடல் போல் நாடாளுமன்றம் உள்ளதாகவும், அதில் க்ளாடியேட்டர் போல் மோடி, மோடி கோஷத்துக்கு மத்தியில் பிரதமர் நுழைவதாகவும் அவர் பேசினார். நாடாளுமன்றத்தில் விமான போக்குரவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா பேசியது: “அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் சொன்ன மோசமான விஷயங்கள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது இந்தியாவின் துயரம். 1972-ல் … Read more

மரக்கடையில் பயங்கர தீ விபத்து – 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில், மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான, தெலங்கானா மாநிலத் தலைநகர், ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள பொஹிகுடா என்ற பகுதியில் மரம் சார்ந்த பொருட்கள், பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் குடோனில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் நிறைய இருந்ததாகத் தெரிகிறது. மேலும், இந்த கடையில் வேலை செய்து வரும் வட மாநிலங்களைச் … Read more