விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் சொத்துக்கள் பறிமுதல்

பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் 19 ஆயிரத்து 111 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய மூவரும் மோசடி செய்ததன் மூலம் வங்கிகளுக்கு 22 ஆயிரத்து 585 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். Source link

தெலுங்கானாவில் மர குடோனில் தீ விபத்து- 13 தொழிலாளர்கள் பலி

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. … Read more

இந்தியா ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்!!

டெல்லி : 30 லட்சம் கோடி ரூபாய் (400 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ஏற்றுமதி இலக்கை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இந்தியா எட்டிவிட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ள அவர், சுயசார்பு இந்தியா என்ற இலக்குடன் கூடிய இந்தியாவின் சாதனை பயணத்திற்கு ஏற்றுமதி சாதனை ஒரு மைல்கல் என்று பாராட்டியுள்ளார். இந்த வெற்றிக்கு உதவி புரிந்த விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து … Read more

`தொட்டுத் தொடரும் பகீர் பாரம்பரியம் இது!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 22-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு… விலை ஏற்றம் தொடருமா? முற்றுப்புள்ளி வருமா?’ எனக் … Read more

இலங்கை தமிழர்களுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 2021-22-ம் நிதியாண்டில் ரூ.80கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கை உள்நாட்டு போரின்போது ஏராளமான தமிழர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் 108 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களின் நல்வாழ்வுக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முகாம்களில் வாழும்இலங்கை தமிழர்கள் தொடர்பாகமக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துபூர்வ மாக … Read more

இந்தியாவில் ஊரடங்கு: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா முதல் அலை தீவிரமாக பரவியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொற்றின் பரவல் குறைந்ததால், படிப்படியாக பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதேசமயம், தளர்வுகளுடன் கூடிய பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன. இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலைகளும் இந்தியாவில் கால் பதித்தது. இந்த அலைகளின் போதும், ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பாதுப்பு குறையத் தொடங்கியதும் தளர்வுகள் … Read more

அமெரிக்காவின் இன்றியமையாத கூட்டாளி இந்தியா – அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்

ரஷ்யாவுடன் இந்தியா வரலாற்று உறவுகளைக் கொண்டிருந்த போதிலும், இந்தியா தங்கள் இன்றியமையாத கூட்டாளி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த நிலையில் இந்தியா நடுநிலையாக இருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், இந்தியாவும் அமெரிக்காவும் இரு நாடுகளின் நலன்களுக்காகக் கூட்டாளிகளாக உள்ளதாகத் … Read more

12 முதல் 17 வயதுடையவர்களுக்கு செலுத்த மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன் பாட்டில் உள்ளன. தடுப்பூசி தேவை அதிகரிப்பதால் மேலும் சில தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. 12 முதல் 17 வயதுக்குட் பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வயதில் உள்ளவர்களுக்கு நோவாவேக்ஸ் தடுப்பூசி பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கி … Read more

திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்

திருமலை : திருமலையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் 10வது கிலோ மீட்டர் அருகே நேற்று மாலை  யானைகள் கூட்டம் சாலையை ஒட்டி வந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை தங்களது செல்போனில் தொலைவில் இருந்தபடி வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலர் சீனிவாசன் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், … Read more

'இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன் தவறாக செலவழிப்பு' – இலங்கை எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இக்குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இந்தியா தந்த பணத்தை கொண்டு அரசியல் ஆதாயம் அடையும் வகையில் 14 ஆயிரம் கிராமங்களில் கடைகள் அமைத்து வருவதாக ஆளுங்கட்சி மீது சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். உணவகங்களிலும் பெட்ரோல் பங்க்குகளிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு பலன் தரும் வகையில்தான் அப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் சஜித் … Read more