சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல்

டெல்லி: சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. இவ்வழக்குகள் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அணை பாதுகாப்பாக உள்ளது என விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

'பாஜக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையை விட காஷ்மீர் ஃபைல்ஸ் பார்ப்பதுதான் முக்கியம்' – மகாராஷ்டிர அமைச்சர் விமர்சனம்

மும்பை: கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ‘​​தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் திரையிடலில் பாஜக எம்எல்ஏக்கள் பலர் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டி பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல். மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை விவாதிப்பதை விட பாஜக எம்எல்ஏக்களுக்கு சமீபத்தில் வெளியான திரைப்படத்தைப் பார்ப்பது முக்கியம் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார். மகாராஷ்டிராவில், பாஜகவின் மூத்த தலைவர் கிருபாசங்கர் சிங் செவ்வாய்க்கிழமை மாலை காஷ்மீர் ஃபைல்ஸ் … Read more

தியாகிகள் நாளையொட்டி விடுதலைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி..

தியாகிகள் நாளையொட்டி நாட்டு விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் மத்தியச் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசி விடுதலை வேட்கையை எடுத்துரைத்த புரட்சியாளர்கள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் லாகூர்ச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், பாரதத் தாயின் பிள்ளைகளான பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு … Read more

ஒடிசா: கூட்டத்தில் காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. பிரசாந்த் ஜாதவ். இவரது கார் கடந்த 12-ந்தேதி கோர்தாவில் உள்ள பனாபூர் என்ற இடத்தில் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இந்த விபத்தில்  22 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 10 போலீஸ்காரர்கள். விபத்து ஏற்படுத்திய பிரசாந்த் ஜாதவ்  கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கூட்டத்தில் கார் புகுந்த நிலையில், கோபமடைந்த மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் பிரசாந்த் ஜாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் … Read more

2020ல் ரசாயன தாக்குதலுக்கு ஆளான ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!!

மாஸ்கோ : மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர எதிர்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கடந்த 2020ம் ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு இலக்காகி இறக்கும் நிலைக்கு சென்றார். ஜெர்மனி உதவியுடன் அதில் இருந்து மீண்டு வந்த அவரை கடந்த ஜனவரி மாதம் மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்ய போலீஸ் … Read more

கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல், துஷார் மேத்தா விளக்கம் அளித்தார். அதாவது, 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் அது கட்டாயமல்ல என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு … Read more

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நாம் மீண்டும் உறுதி ஏற்போம்: உலக தண்ணீர் தினத்தில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நாம் மீண்டும் உறுதியேற்போம் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டு களாக தண்ணீர் தொடர்பான உரை யாடல் ஒரு வெகுஜன இயக்கமாக மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தண்ணீரை பாதுகாப்பதற்காக உழைக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அவர் பாராட்டியுள்ளார். தண்ணீரின் முக்கியத்துவம் கருதி, கடந்த 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 –ம் தேதி உலக தண்ணீர் தினமாக … Read more

பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி: தரமான சம்பவம் காத்திருக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி அரசியலில் பெரியளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். சோனியா, ராகுல் பங்கேற்கும் அரசியல் பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே பிரியங்கா காந்தி தலைகாட்டி வந்தார். ஆனால், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்து வந்தனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் தோல்வி முகத்தை சந்தித்து வந்த காரணத்தால், பிரியங்காவை களமிறக்க … Read more

ரசிகர்களின் கூட்டநெரிசலில் ஸ்கீரின் சேதமடைவதால் ஆந்திராவில், ஸ்கீரின் முன்பாக முள்வேலி அமைத்துள்ள திரையரங்கு நிர்வாகம்..

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர் ‘ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஸ்கீரின் முன்பாக முள்வேலி தடுப்புகளை திரையரங்கு நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் உலகம் முழுவதும் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளதால், ஸ்ரீகாகுளத்தில் உள்ள திரையரங்கில் காட்சித்திரை முன்பாக முள்வேலி தடுப்புகளை அமைத்துள்ளனர். “புஸ்பா” படத்தின் போது ரசிகர்களின் கூட்டநெரிசலால், … Read more

400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை அடைந்த இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘400 பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதி என்ற இலக்கை இந்தியா முதன்முறையாக எட்டி சாதனைப் படைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், எம்.எஸ்.எம்.இ.-க்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றமதியாளர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் இது முக்கிய மைல்கல்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதையும் படியுங்கள்…  பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: நகர்புற பகுதிகளில் 28 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்- மத்திய அரசு தகவல்