கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு – விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு … Read more

வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ <!– வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வல… –>

உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைவரை ஓடியே சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி பெப்னா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆவார். ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுத் தொடங்கியது. வேட்பு மனு முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன் பல்லியா ஆட்சியரக வாயிலுக்குக் காரில் … Read more

காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் இல்லை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காரை தனியாக ஓட்டி செல்பவர்கள் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அபராதம் விதித்து வந்தன இதற்கு டெல்லி வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டெல்லி ஜகோர்ட்டும் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு … Read more

புதுச்சேரி ஜிப்மரில் பிப்.7ம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு மீண்டும் செயல்படும் என அறிவிப்பு..!!

புதுச்சேரி: பிப்ரவரி 7ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்படும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறைவதால் வழக்கம் போல் சிகிச்சை பிரிவுகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

டெல்லி, காஷ்மீரில் கடும் நில அதிர்வு

டெல்லி: காஷ்மீர், டெல்லி பகுதிகளில் இன்று கடும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக காஷ்மீர், டெல்லி பகுதிகளில் கடும் நில … Read more

அரசு ஊழியர்களுக்கு ஷாக் – மாநில அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறையை 7 நாட்களாக குறைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், … Read more

மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நிறுவப்படும் என அறிவிப்பு <!– மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் கவசம் என்னும் பாதுகாப்பு… –>

மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் ரயில் மோதலைத் தவிர்க்கும் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. ஒரே வழித்தடத்தில் இரு ரயில்கள் குறிப்பிட்ட தொலைவுக்குள் வரும்போது தானாகவே ரயிலின் இயக்கத்தை நிறுத்தி மோதலைத் தவிர்க்க உதவும் அமைப்பு கவசம் எனப்படுகிறது. ரயிலின் இயக்கத்தில் மனித தவறுகள், தவறான செயல்பாடுகள் ஆகியன குறித்தும் இந்த அமைப்பு தானாகவே அறிவிக்கும். ரயில்கள் அதிவிரைவாகச் செல்லும்போதும், நிலையப் பகுதிகளிலும், பணிநடைபெறும் தடங்களிலும் மோதல் ஏற்படாமல் தடுக்கவும் இந்த … Read more

இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

திருப்பதி: ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் பரப்பளவில் பெரியதாக இருப்பதால் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தமாக மாவட்ட தலைநகருக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நிர்வாக வசதிக்காக ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி … Read more

ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம்

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக காஷ்மீர், நொய்டாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 1.27 லட்சம் பேருக்கு கரோனா; பாசிட்டிவிட்டி 7.9% ஆக சரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் (நேற்றைய பாதிப்பு 1,49,394) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிட்டிவிட்டி 7.9% ஆகக் சரிந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நாட்டில் தினசரி கரோனா பாசிட்டிவிட்டி 7.98% ஆகவும், வாராந்திர பாசிட்டிவிட்டி 11.21% ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. கரோனாவில் குணமடைவோர் விகிதம் 95.64 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: > கடந்த 24 … Read more