மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதி – பசவராஜ் பொம்மை
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களுருவில் அனைத்து கட்சி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சட்டப்பூர்வமாக எந்த மதிப்பும் இல்லை என்றார். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் … Read more