அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – மாநில அரசு அதிரடி ஆக்‌ஷன்!

அலுவலகங்களுக்கு தாமதமாக வந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்து மாநில அரசு வழங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நவி மும்பை மாநகராட்சி நிர்வாகத்தில், அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இரண்டு முறை நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஊழியர்கள் பலர் தாமதமாக வருவது உறுதியாகியது. … Read more

பிரதமர் மோடியை வீழ்த்த புதிய அணி: தேர்தல் வியூகம் வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருக்கு ரூ.300 கோடி

ஐதராபாத்: 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணியை உருவாக்க வேண்டும். மேற்கு வங்காள முதல் -மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவருமே தங்களை மாற்று தலைவராக முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லது மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி … Read more

மதுக்கடை அருகே நின்றிருந்த பாஜக மாவட்ட நிர்வாகி சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மதுக்கடை அருகே நின்றிருந்த பாஜக மாவட்ட நிர்வாகி கவுரவ் ஜெய்ஸ்வால் என்பவர் மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்ட பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான கவுரவ் ஜெய்ஸ்வால், நேற்றிரவு சிருஹா வார்டுக்கு அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். இவர், நகராட்சி தலைவர் கிருஷ்ணகோபால் ஜெய்ஸ்வாலின் மருமகன் ஆவார். இந்நிலையில் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கவுரவ் ஜெய்ஸ்வாலை, அங்கு வந்த இருவரில் ஒருவன் திடீரென … Read more

காற்று மாசு | பூமியின் மோசமான 100 இடங்களில் 63 இந்திய நகரங்கள் – IQAir ஆய்வறிக்கை தகவல்

புதுடெல்லி: நம் பூமியில் காற்று மாசு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதுவும் டாப் 15 பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IQAir என்ற நிறுவனம் சர்வதேச காற்றுத் தரம் குறித்த இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி வளிமண்டலத்தில் மிகவும் பொதுவானதும், ஆபத்தானதுமான காற்று மாசுபடுத்திகள் – பிஎம் 2.5, பிஎம் 10, ஓசோன் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை … Read more

அசானி புயல் நாளை அதிகாலை மியான்மர் பகுதியில் கரையை கடக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறியது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகளுக்கு 100 கி,மீ. தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியிலும், நிக்கோபார் தீவுகளுக்கு 200 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியிலும் அசானி புயல்மையம் கொண்டிருந்தது. பின்னர் அங்கிருந்து மியான்மர் மற்றும் வங்க தேச கடற்கரை நோக்கி நகரத்தொடங்கியது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு … Read more

கணவர் எம்எல்ஏ ஆனதால் கோபம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன பாஜக மாஜி அமைச்சர்

லக்னோ: தனது கணவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால் கோபமடைந்த முன்னாள் பாஜக அமைச்சர், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில முன்னாள் அமைச்சர் ஸ்வாதி சிங்கின் கணவர் தயா சங்கர் சிங் பல்லியா சதர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தேர்தலில் ஸ்வாதி சிங்கிற்கு வாய்ப்பு அளிக்காததற்கு, தனது கணவர் தான் காரணம் என்று ஸ்வாதி சிங் கூறிவந்தார். மேலும், கடந்த சில … Read more

உலகின் அதிக மாசடைந்த தலைநகரம்; தொடர்ந்து 2வது வருடமாக முதலிடத்தில் டெல்லி!

உலகின் அதிக மாசடைந்த தலைநகரங்களுக்கான காற்று தர அறிக்கையில் தொடர்ந்து 2வது வருடங்களாக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி … Read more

ஹிஜாப் விவகாரத்தால் புறக்கணித்த முஸ்லிம் மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்டம்

பெங்களூரு: ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து தேர்வை புறக்கணித்த முஸ்லிம் மாணவிகளுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலை யங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து உடுப்பியில் 6 கல்லூரி மாணவிகள் கடந்த ஜனவரியில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வையும் புறக்கணித்தனர். மேலும், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. … Read more

நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட கணவன்..!

பெங்களூரு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன், தடுக்க வந்த மகனையும் காயப்படுத்திவிட்டு, தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்திப்பள்ளி அடுத்த அப்பண்ணபாளையாவைச் சேர்ந்தவர்கள் சம்பத் – லாவண்யா தம்பதி. 2 மகன்கள் உள்ள நிலையில், சம்பத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதனால் இருவருக்கும் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் லாவண்யாவின் பெற்றோர் வந்து தம்பதியை சமாதானம் செய்து சென்றதாக … Read more

அகிலேஷ் யாதவ், அசம் கான் ஆகியோர் எம்.பி. பதவியில் இருந்து விலகல்

புதுடெல்லி: சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவ் கார்ஹால் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக செயல்பட அவர் முடிவு செய்துள்ளார். உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் அசம்கார் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று … Read more