பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு; மாநிலங்களவையும் முடங்கியது..!!

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2021 நவம்பர் 4ம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பிறகு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் சாமான்ய மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.  5 … Read more

இந்தியாவில் எத்தனை புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது?-அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. புலிகள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் புலிகளை பாதுகாக்க மத்திய அரசு ஏதேனும் திட்டங்களை முன்மொழிந்து உள்ளதா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, “வனவிலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் அதன் தோல் உள்ளிட்ட பாகங்களை கடத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது மாநில மற்றும் யூனியன் … Read more

உத்தராகண்ட்டில் மீண்டும் முதல்வராகிறார் புஷ்கர் சிங்

புதுடெல்லி: உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், கதிமா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும் கட்சி பெற்ற அமோக வெற்றிக்கு புஷ்கர் சிங் தாமியின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அவர் மீண்டும் முதல்வராக … Read more

உத்திரபிரதேசத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு திரும்பிய கல்லூரி மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 3 மாணவர்கள் பலி.!

உத்திரபிரதேசத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்புற சாலையில் வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். லக்னோவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 4 மாணவர்கள், ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக ராம்பூர் சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில், வேகமாக வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுனர் வாகனத்தை கட்டுப்படுத்தும் முன் அது … Read more

முல்லை பெரியாறு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்க அளவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்தது. கேரள அரசு சில தகவல்களை திடீரென தாக்கல் செய்ததால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் தங்களிடம் இல்லை: தேசிய தேர்வு முகாமை பதில்

டெல்லி: நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகாமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற தேர்வெழுதுகின்ற மாணவர்களின் விவரங்கள் மாநில வாரியாக இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகாமை பதில் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு என்பது தேசிய அளவில் மிக பெரிய விவாத பொருளாக இருந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சியினர் ஆளும் … Read more

மணிப்பூர் முதல்வராக 2-வது முறை பிரேன் சிங் பதவியேற்பு

இம்பால்: தொடர்ந்து 2-வது முறையாக மணிப்பூர் மாநில முதல்வராக என். பிரேன் சிங் பதவியேற்றார். மணிப்பூர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 2002-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலம் மணிப்பூர் ஆகும். ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, … Read more

இறுதியாண்டு தேர்வு ரத்து: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், அந்நாட்டில் இருந்து இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். குறிப்பாக, மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டு சென்றவர்கள். இதனால், அவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, போர் காரணமாக இந்தியா திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள் அவர்களது கல்வியை இங்கேயே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்ற 5ஆவது ஆண்டு … Read more

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறாது – வானிலை ஆய்வு மையம்

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புயலாக உருமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விட்டதாகவும், ஆழ்ந்த … Read more

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் அமர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை இன்று உயர்ந்துள்ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகளக்கு எப்படி பதிலடி கொடுப்பது குறித்து … Read more