கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு 5,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு 5,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தராண்ட் மற்றும் கோவாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அம்மாநிலங்களின் முதல்வர்களாக முறையே புஷ்கர் சிங் தாமி, பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தராகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளை பாஜக கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட கட்டிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் … Read more
சென்னையை சேர்ந்தவர் சுப்பராவ் பத்மம். வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் அடிக்கடி கேரளாவில் உள்ள கோவில்களுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். சமீபத்தில் அவர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது ஆலுவாவில் உள்ள ஒரு சாலையோர கடையில் கேரள லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அதற்கு நடைபெற்ற குலுக்கலில் சுப்பராவ் பத்மம் வாங்கியிருந்த சீட்டு இரண்டாவது பரிசாக 25 லட்சம் பரிசு விழுந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான தகவலை. சென்னையில் இருந்த பத்மத்திடம்,. லாட்டரி சீட்டு விற்பனை செய்து … Read more
இந்தியா, ஆஸ்திரேலியா இடையான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டுப் பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார். இந்திய – ஆஸ்திரேலிய மாநாட்டில் காணொலியில் இருநாட்டுப் பிரதமர்களும் பேச்சு நடத்தியது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தூர்தர்சன் நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப அந்நாட்டு ஒலிபரப்புச் சேவையுடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் முதலீட்டை ஈர்க்க அந்நாட்டில் உள்ளதைப்போல் வரிச்சலுகை அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். … Read more
பனாஜி: கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் பா.ஜ.க. சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார். சட்டசபைக் குழு … Read more
டெல்லி: சீன விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 132 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விமானம் விழுந்து … Read more
தனது பள்ளி சுற்றுப்பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி 6 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பலமனேர் காவல் நிலையம் எப்போதும் போல இன்று காலையும் பரபரப்பாக காணப்பட்டது. பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் விசாரணை, சண்டை சச்சரவு வழக்குகளில் சமரச முயற்சி என போலீஸார் படு பிசியாக இயங்கிக் கொண்டிருக்க, பள்ளிச் சீருடையுடன் 6 வயது சிறுவன் ஒருவன் அந்தக் காவல் … Read more
புதுடெல்லி: இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, ஒருவர் அதைப் பாராட்டியதாகக் கூறுவது தவறாகும் என்று ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ‘‘எப்போதும் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய, ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது. உக்ரைன் மீது போர் … Read more
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆளும் பாஜக 47 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் … Read more
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பது குறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், உக்ரைனில் இருந்து 22 ஆயிரத்திற்கு 500 இந்தியர்கள் மீட்கபட்டுள்ளதாகவும், மிகப் பெரிய மீட்பு பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனில் மேலும் இந்தியர்கள் சிக்கி இருப்பதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் அரசு … Read more