அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் – வானிலை மையம்

12 மணி நேரத்தில் புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் – வானிலை மையம் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் … Read more

கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவன் அடித்து கொலை

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்தவர் உதய் கிரண் (வயது 8). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அங்குள்ள மரத்தில் மர்மமான முறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கினார். கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை பரிசோதனை செய்த போது சிறுவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த … Read more

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சித்தூர் :  சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு, பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் பணம், நகை மற்றும் … Read more

“ஜெயித்த பின்னும் பாஜக ஆட்சியமைக்க முடியாததற்கு இதான் காரணம்”- அரவிந்த் கெஜ்ரிவால்

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தாலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் சில சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி பாஜக-வில் கடுமையான உட்கட்சி குழப்பம் நிலவுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவு, கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியாகி இருந்தது. அதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற நான்கு … Read more

'காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன' – கொட்டித் தீர்த்த குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: “காங்கிரஸாக இருக்கட்டும், இல்லை வேறு கட்சிகளாக இருக்கட்டும்… எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன. ஒருநாள் எனது ஓய்வுச் செய்தியை நீங்கள் கேட்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “காங்கிரஸாக இருக்கட்டும் இல்லை, வேறு கட்சிகளாக இருக்கட்டும்… எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன. ஒருநாள் எனது ஓய்வு செய்தியை நீங்கள் கேட்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த … Read more

நான் "வெளியாள்" என்றால்.. வாரணாசியில் போட்டியிட்ட மோடி யார்?.. சத்ருகன் கேள்வி

மேற்கு வங்காள நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் என்னை வெளியாள் , வந்தேறி என்று பாஜகவினர் விமர்சிக்கின்றனர். அப்படியானால் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி யார் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் நடிகர் சத்ருகன் சின்ஹா . ஆரம்பத்தில் பாஜக அனுதாபியாக இருந்தவர் சத்ருகன் சின்ஹா. பின்னர் காங்கிரஸ் பக்கம் போனார். இப்போது திரினமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவரை கட்சியில் இணைக்க பிரஷாந்த் கிஷோரின் முயற்சிகளே முக்கியக் காரணம். மமதா … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்திய மாணவர்களை ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் வான் எல்லை மூடப்பட்டதால் பக்கத்து நாடுகளான போலந்து, ஹங்கேரி, சுலோ வாக்கியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் விமானம், விமானப்படை மூலம் மீட்கப்பட்டனர். 2-வது கட்டமாக உக்ரைனில் இருந்து ரஷிய நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுகிறார்கள். உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுக்கள் … Read more

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்… ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் காலியாக உள்ள 1 இடத்திற்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். இந்த நிலையில் ஆம் … Read more

வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்: பெயர் காரணம்?

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று அந்தமான் நிகோபார் தீவுகளை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் சூறாவளிக்கு இந்தியா உட்பட 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம். இந்த பெயர்கள் முன்கூட்டியே பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் அசானி என்ற பெயரை இலங்கை பரிந்துரைத்துள்ளது.  அசானி: பெயர் … Read more

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது சொத்தில் மகன் உரிமை கோர முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருபெண், மறதி உட்பட பல்வேறு நோய் காரணமாக படுத்த படுக்கையாக உள்ள தனது கணவரின் சொத்துக்கு சட்ட பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை கவனித்து வருகிறேன். அவருக்கான மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளேன். எங்களுக்கு ஒரு மகன் இருந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எனது பெயரில் ஒரு வீடும், என் கணவர் … Read more