வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்: பெயர் காரணம்?

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று அந்தமான் நிகோபார் தீவுகளை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் சூறாவளிக்கு இந்தியா உட்பட 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம். இந்த பெயர்கள் முன்கூட்டியே பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் அசானி என்ற பெயரை இலங்கை பரிந்துரைத்துள்ளது.  அசானி: பெயர் … Read more

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது சொத்தில் மகன் உரிமை கோர முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருபெண், மறதி உட்பட பல்வேறு நோய் காரணமாக படுத்த படுக்கையாக உள்ள தனது கணவரின் சொத்துக்கு சட்ட பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை கவனித்து வருகிறேன். அவருக்கான மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளேன். எங்களுக்கு ஒரு மகன் இருந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எனது பெயரில் ஒரு வீடும், என் கணவர் … Read more

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜாக்பாட் – ராஜ்யசபா எம்பி ஆகிறார்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மன், கடந்த 16 ஆம் … Read more

ஆஸ்திரேலிய அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பழங்கால பொக்கிஷங்களை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெவ்வேறு காலக்கட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுவாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆஸ்திரேலிய அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அவற்றை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவ பெருமான், சக்தி, விஷ்ணு மற்றும் ஜெயின் மத பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை பிரதமர் ஆய்வு செய்தார். இவை அனைத்தும் தமிழகம், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   … Read more

டெல்லி- தோகா கத்தார் ஏர்வேஸ் விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து இன்று தோகோவிற்கு இன்று காலை புற்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. கத்தார் ஏர்வைஸ் நிறுவனத்தின் QR579 விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தோகா புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கார்கோ அறையில் இருந்து புகை வந்ததால் உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதனால் விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பான வகையில் தரையிறக்கப்பட்டது. … Read more

பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு

டெல்லி: பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தினார். அண்மைக்காலமாக ஏராளமான ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றது.  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகும் போக்கும் அதிகரித்து வருகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.   

சொந்த ஊருக்கு வந்தது உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடல்; முதல்வர் மரியாதை

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. உக்ரைனில் கடந்த ஒன்றாம் தேதி, கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்தார். போர் சூழலால் நவீனின் உடலை உடனே இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல், விமானம் மூலம் வரும் இன்று அதிகாலை பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் மாணவர் நவீன் … Read more

லாலுவின் ஆர்ஜேடி கட்சியுடன் இணைந்தது எல்ஜேடி: 25 ஆண்டுகளுக்கு பின் சரத்யாதவ் முடிவு

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சி (எல்ஜேடி) நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி இணைந்தது. லோக்தந்த்ரிக் ஜனதாதளம் கட்சியின் தலைவரான சரத் யாதவ்,தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி, டெல்லியி்ல் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் இணைப்பு முறைப்படி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சரத் யாதவ் … Read more

ஐந்து இடங்களில் திருப்பதியும் ஒன்னு: மாஸ் ப்ளானுடன் களமிறங்கும் தேவஸ்தானம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறன் நடவடிக்கைகளை பெரிய அளவில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த முன்முயற்சிகளால் அது பெறும் பணப் பலன்களைத் தவிர, 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டில் திருமலை திருப்பதியும் தனது பங்களிப்பை அளிக்கவுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், AP State Energy Efficiency Development Corporation Limited (APSEEDCO) உடன் இணைந்து தனது கட்டிடங்களில் உள்ள 5,000 சீலிங் ஃபேன்களை, பிரஷ்லெஸ் டைரக்ட் … Read more

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆசானி புயலாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் அந்தமான்- நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more