லாலுவின் ஆர்ஜேடி கட்சியுடன் இணைந்தது எல்ஜேடி: 25 ஆண்டுகளுக்கு பின் சரத்யாதவ் முடிவு

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சி (எல்ஜேடி) நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி இணைந்தது. லோக்தந்த்ரிக் ஜனதாதளம் கட்சியின் தலைவரான சரத் யாதவ்,தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி, டெல்லியி்ல் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் இணைப்பு முறைப்படி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சரத் யாதவ் … Read more

ஐந்து இடங்களில் திருப்பதியும் ஒன்னு: மாஸ் ப்ளானுடன் களமிறங்கும் தேவஸ்தானம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறன் நடவடிக்கைகளை பெரிய அளவில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த முன்முயற்சிகளால் அது பெறும் பணப் பலன்களைத் தவிர, 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டில் திருமலை திருப்பதியும் தனது பங்களிப்பை அளிக்கவுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், AP State Energy Efficiency Development Corporation Limited (APSEEDCO) உடன் இணைந்து தனது கட்டிடங்களில் உள்ள 5,000 சீலிங் ஃபேன்களை, பிரஷ்லெஸ் டைரக்ட் … Read more

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆசானி புயலாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் அந்தமான்- நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

காங்கிரஸ் தேர்தல் குழுவை புதிதாக நியமிக்க வேண்டும்- அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி-23) கடந்த 2020-ல் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர்களின் கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் அதிருப்தி தலைவர்களின் கோரிக்கை மீண்டும் எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து குலாம் நபி ஆசாத் வீட்டில் … Read more

சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம்: ஒன்றிய அரசு

டெல்லி : சர்க்கரை உற்பத்தியிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.மும்பையில் நடந்த சர்க்கரை மற்றும் எத்தனால் இந்தியா மாநாட்டில், உள்நாடு மற்றும் உலகளாவிய சர்க்கரை  தொழிலில் உள்ள சவால்கள், இந்தியாவில் சர்க்கரை மற்றும் எத்தனால் துறையை புதுமையாகவும், நிலைத்தன்மை உடையதாகவும் மாற்றுவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:’நாட்டின் தேவைக்கு ஏற்ப சர்க்கரை … Read more

"பிரதமர் மோடி தினசரி 2 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்" – சந்திரகாந்த் பாட்டீல்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக கடுமையாக உழைப்பதாகவும் இதனால் அவர் தினசரி 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். கோலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பரப்புரை தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 2 மணி நேரம் தூங்குவதையும் தவிர்த்து மேலும் உழைக்க பிரதமர் முயற்சி செய்து வருவதாகவும் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் அறிந்து … Read more

வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிப்பு: மக்களுக்கு ஐசிஎம்ஆர் நம்பிக்கை தகவல்

புனே: வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூடுதல் இயக்குநர் சமிரான் பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் ஐரோப்பா, ஆசிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் … Read more

எத்தனால் நிரப்பும் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு – நிதின் கட்கரி

எரியாற்றல் தேவைக்கு எத்தனாலைப் பயன்படுத்துவது குறித்துப் பல்வேறு அமைச்சகங்களுடன் பேசி வருவதாக மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பல்வகை எரிபொருள்களால் இயங்கும் எஞ்சின்கள் கொண்ட வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்றும், எத்தனால் நிரப்பும் உயிரி எரிபொருள் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தொலைத்தொடர்புக் கோபுரங்களின் மின்சார ஜெனரேட்டர்களில் டீசலுக்குப் பதில் எத்தனாலைப் பயன்படுத்தவும், விமானங்களுக்கு எத்தனாலைப் பயன்படுத்தவும் அரசு ஆராய்ந்து வருவதாக கூறினார். இது குறித்து விமானப்படைத் தளபதி, … Read more

ஹர்பஜன் சிங்கை மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக நியமித்தது ஆம் ஆத்மி கட்சி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்.பி.க்கள் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 31-ந்தேதி நடைபெற இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏழு மாநிலங்களை எம்.பி.க்கள் தேர்வு செய்ய முடியும். இதில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. ஐந்து இடங்களுக்கும் வேட்பாளரை நியமித்து ஆம் ஆத்மி கட்சியால் வெற்றி பெற முடியும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் … Read more

சரக்கு வைப்பகத்தில் திடீர் புகை: டெல்லியில் இருந்து கத்தார் புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்..!!

கராச்சி: டெல்லியில் இருந்து கத்தார் புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சரக்கு வைப்பகத்தில் புகை ஏற்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.