காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் விரட்டப்பட்டபோது சகோதரருக்கு நடந்த துயரத்தை விவரித்த அனுபம் கேரின் தாய்

மும்பை: காஷ்மீரில் வசித்து வந்த பண்டிட்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட போது தனது சகோதரருக்கு ஏற்பட்ட துயரம் குறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் தாயார் விவரித்துள்ளார். 1990-களில் காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப் பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை மத்தியில் ஆளும் பாஜக வரவேற்றுள்ளது. அதேநேரம் இந்தத் திரைப்படம் உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் … Read more

அசானி புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது. இதனிடையே, அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்கதேச கடற்கரையை நோக்கி … Read more

பிரதமர் மோடி தலைமையில் 3 மாநிலங்களில் இன்று பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்.!

உத்தரப்பிரதேசம் ,உத்தரகாண்ட் ,கோவா மாநிலங்களில் புதிய அரசு அமைப்பது பற்றி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர இதர நான்கு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் உத்தரகாண்ட் அரசு நாளை பதவியேற்க உள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான இரண்டாவது பாஜக அரசு வரும் 25 ஆம் தேதி பதவியேற்கிறது. … Read more

பசவராஜ் பொம்மைக்கு மக்களை விட சினிமா நிகழ்ச்சி தான் முக்கியம்: குமாரசாமி

பெங்களூரு : துமகூரு மாவட்டம் பாவகடாவில் நேற்று ஒரு தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்று வருகிறவா்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கினார். அதன் பிறகு அவர் … Read more

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள்: RBI தகவல்

டெல்லி: டிசம்பர் 2021-ல் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் (28,540) உள்ளதா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் மகாராஷ்டிரா (27,945), 3-ம் இடத்தில் உத்தரப்பிரதேசம்(23,460) உள்ளது.

திறக்கப்பட்ட விலங்கியல் பூங்கா… தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் விசிட்!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ராஜீவ்காந்தி விலங்கியல் பூங்கா, கொரோனா கட்டுப்பாடுகல் முடிவடைந்து பொதுமக்கள் பார்வைக்காக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த பூங்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டிருந்தது. பின்னர் அடுத்தடுத்த அலைகலில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டதால் அது திறக்கப்படாமலேயே இருந்தது.  இந்நிலையில் தற்போது இந்திய அளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து ராஜீவ்காந்தி விலங்கியல் பூங்கா திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரு ஆண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டதால், ஒரே நாளில் 12ஆயிரத்திற்கும் … Read more

ஜப்பான் பிரதமருக்கு சந்தன மரத்தால் ஆன கிருஷ்ண கடவுள் கலைப்பொருள் பரிசு: பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடாவுக்கு சந்தன மரத்தால் ஆன கிருஷ்ண கடவுள் கலைநயப் பொருளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கி சிறப்பித்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான 14-வது வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரதமர் நரேந்திர … Read more

முதல் டோஸுக்குப் பிறகு 8 முதல் 16 வாரங்களுக்கு இடையே 2-வது கோவிஷீல்ட் டோஸ் போட்டுக் கொள்ளலாம் – NTAGI

முதல் டோஸுக்குப் பிறகு 8 முதல் 16 வாரங்களுக்கு இடையே இரண்டாவது கோவிஷீல்ட் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என NTAGI எனப்படும் நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. தற்போது, கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ், முதல் டோஸுக்குப் பிறகு 12 முதல் 16 வாரங்களுக்கு இடையே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் NTAGI விடுத்துள்ள அறிக்கையில், கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் எட்டு வாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்டால் உடலில் ஆன்டிபாடி பெருகுவதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 6 … Read more

கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ செலுத்த கால இடைவெளி குறைகிறது

புதுடெல்லி : கொரோனா வைரசுக்கு எதிரான அரசின் தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் டோஸ்-ஐ செலுத்திய பின்னர் 12 முதல் 16 வாரங்களில் 2-வது டோஸ் தற்போது செலுத்தப்படுகிறது. இந்த கால இடைவெளி,தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் டோஸ் செலுத்தி, 28 நாளில் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது டோஸ் … Read more

பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அடுத்த மாதம் 2ம்  தேதி  இந்தியா வருகிறார். இந்தியா- இஸ்ரேல் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வர உள்ளார். 4 நாள் பயணத்தின் போது  பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில்  ஒப்பந்தங்கள் … Read more