சிவாஜி சிலையை திறக்க எதிர்ப்பு: தெலங்கானாவில் பாஜக – டிஆர்எஸ் தொண்டர்கள் பயங்கர மோதல்

தெலங்கானாவில் சத்ரபதி சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மீது டிஆர்எஸ் தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் இரு கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தனிப்பெரும் கட்சியாக விளங்கி வந்த டிஆர்எஸ்-க்கு மாற்று சக்தியாக தற்போது பாஜக உருவெடுத்து வருகிறது. இதனிடையே, தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதான் பகுதியில் பாஜக சார்பில் அண்மையில் மராட்டிய மன்னர் … Read more

பீகார் : கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் பலி

பீகார் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கள்ளச்சாராயம் குடித்த மாதேபுரா, பாகல்புர், பங்கா, முர்ளிகஞ்ச் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். கடந்த வாரம் பாகல்பூர் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் பலர் அதற்கு பலியாகி உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  Source link

மட்டன் சமைக்க மனைவி மறுப்பதாக கூறி 100க்கு போன் செய்த கணவன்-வீட்டிற்கு படையெடுத்த போலீசார்

தெலங்கானாவில் மனைவி மட்டன் சமைக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாக 100க்கு டயல் செய்து தொந்தரவு அளித்த கணவன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள செர்லா கௌராராம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். ஹோலி பண்டிகையையொட்டி தனது மனைவியிடம் மட்டன் சமைத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் நவீனின் மனைவி மட்டன் சமைக்க மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே மட்டன் சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. பண்டிகை நாளில் கூட விரும்பியதை சமைக்கவில்லை என நவீன் கோபம் … Read more

''காஷ்மீர் பைல்ஸ்'' எடுத்தவர்கள் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் படம் எடுக்க வேண்டும்: ம.பி. ஐஏஎஸ் அதிகாரி

போபால்: காஷ்மீர் பைல்ஸ் எடுத்தவர்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் படம் எடுக்க வேண்டும் என மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மார்ச் 11ஆம் தேதி வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் சித்தரிக்கிறது. விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த, இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் … Read more

மணிப்பூர் முதல்வராக 2வது முறையாக பிரேன் சிங் தேர்வு!

மணிப்பூர் மாநில முதலமைச்சராக, இரண்டாவது முறையாக, பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில், மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு அண்மையில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆளும் பாஜக , 32 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. எனினும், முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது குறித்து பாஜகவில் … Read more

விருந்தில் கறித்துண்டு கம்மியாக இருந்ததால், நண்பனுக்கு கத்திக்குத்து : கறி பீஸால் வெறிப்பிடித்து நண்பர்கள் பழிக்கு பழி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் விருந்து நிகழ்ச்சியில் கறித்துண்டு கம்மியாக போட்டதாக கூறி நண்பர்களுக்கு இடையே உருவான தகராறு கொலையில் முடிந்துள்ளது. நண்பர்களான ஷேர்கானும், சிவாவும் சில நாட்களுக்கு முன் விருந்து ஒன்றில் பங்கேற்றனர். அப்போது, உணவு பரிமாறிய ஷேர்கான் சிவாவுக்கு இறைச்சித் துண்டுகளை கம்மியாக வைத்ததாக கூறப்படும் நிலையில், அதனை கேட்டு சிவா வம்பிழுத்ததோடு, ஷேர்கானை கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. காயமடைந்த ஷேர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி … Read more

இடிந்து விழுந்த தற்காலிக ஸ்டேடியம்! 200 பேருக்கு மேல் படுகாயம்! பகீர் வீடியோ!

கேரள மாநிலத்தில் கால்பந்து போட்டிக்காக தற்காலிகமாக கட்டப்பட்ட ஸ்டேடியத்தின் கேலரி இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டூரில் செவன்ஸ் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை புரிவார்கள் என்பதால் தற்காலிக ஸ்டெடியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. நேற்று இரவு மைதானம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்தபோது, ஸ்டேடியத்தில் இருந்த சில கேலரிகள் திடீரென சரிந்தன. அதில் அமர்ந்திருந்த மக்கள் மீது கேலரியின் மரப்பலகைகள் விழுந்ததும் மக்கள் அலறத் துவங்கினர். பலர் … Read more

‘ஹிஜாப்’ தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. “ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் கர்நாடகாவில் உமாபதி என்ற வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் மூலம் … Read more

32,500 சதுரடியில் 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படம் வரைந்து, பொறியியல் மாணவர் அசத்தல்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர், 32,500 சதுரடி பரப்பளவில், 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படத்தை உருவாக்கினார். சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வினோத் என்ற அந்த மாணவன் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் 260 அடி நீளம், 125 அடி அகலத்தில் பிரமாண்டமான சிட்டுக்குருவியின் உருவப்படத்தை தானியங்களால் உருவாக்கினார். Source link

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.5.13 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாகவும், தலை முடியை காணிக்கையாகவும் மற்றும் இதர நன்கொடைகளாகவும் வழங்குகின்றனர். அதன்படி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைப்பது வழக்கம். ஒரு சில நாட்களில் 4 கோடி ரூபாய் வரை கிடைப்பது உண்டு. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையான நேற்று ஒரேநாளில் 80 ஆயிரத்து 429 பக்தர்கள் … Read more