இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு – மோடி அரசு எடுக்கும் முடிவு?

இந்தியாவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதே போல் ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் … Read more

திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கிய சிறுத்தை.. வனத்துறையினர் எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை சிறுத்தை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. Chinchlakhaire கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தனது வீட்டின் கதவை தாளிடாமல் அதன் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடுஇரவில் வந்த சிறுத்தை ஒன்று கழுத்து பகுதியில் தாக்கி அவரை இழுத்துச் சென்றது. அதிகாலையில், தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை … Read more

25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: பஞ்சாப் முதல்வரின் முதல் அதிரடி

சண்டிகர்: அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்கு பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் உடனடியாக 25 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும் நேற்று 10 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், … Read more

கங்கை ஆற்று மண்ணை பயன்படுத்தி உரம் தயாரிக்க மத்திய அரசு முடிவு

விவசாய விளை நிலங்களில் ரசாயன உர பயன்பாட்டை குறைப்பதற்காக சத்துக்கள் சேர்க்கப்பட்ட கங்கை ஆற்றுப்படுகை மண்ணை விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது கங்கை நதி தூய்மை இயக்கத்தின் இயக்குநர் அசோக் குமார் இது குறித்து டெல்லியில் பேசினார். அப்போது, கங்கை நதியை தூய்மைப்படுத்துகையில் ஏராமான சேறு, சகதிகள் கிடைப்பதாகவும் இவற்றுடன் பாஸ்பரஸ் போன்ற பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை சேர்த்து உரமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். கங்கை நதி மண்ணைக்கொண்டு உரங்களை தயாரிக்கும் பணி … Read more

OH MY GOD! – சரிந்து விழுந்த பார்வையாளர்கள் மாடம் – 500 பேர் கதி?

கேரள மாநிலத்தில், கால்பந்து போட்டிக்காக அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் மாடம் திடீரென்று சரிந்து விழுந்த விபத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில் உள்ள எல்.பி. பள்ளி மைதானத்தில் அகில இந்திய எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பார்வையிடுவதற்காக மைதானத்தை சுற்றிலும் தற்காலிகமான பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு கால்பந்து தொடரின் இறுதிப் … Read more

73 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்ரீநகர் -கார்கில்-லே சாலை!

ஜம்மு காஷ்மீர் -லடாக் இடையே ஸ்ரீநகர்-கார்கில்-லே ரோட்டில் உள்ள ஜோஜி லா கணவாய் பனியால் மூடப்பட்ட நிலையில், 73 நாட்களுக்குப்பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. நேற்று அத்தியாவசியப் பொருட்களுடன் ஏராளமான சரக்கு வாகனங்கள் ஜோஜி லா கணவாயைக் கடந்து கார்கில் சென்றடைந்தன. முதல் முறையாக இந்த சாதனையை எல்லைச் சாலைகள் அமைப்பு உருவாக்கியுள்ளது.  கடும் பனிப்பொழிவுக்கு ஜனவரி 5 ஆம் தேதி இச்சாலை மூடப்பட்டது. இதையடுத்து சாலையின் இருபுறமும் மூடிய பனியை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக … Read more

மணிப்பூர் முதல்வராக 2வது முறையாக பதவியேற்கிறார் பிரேன் சிங்

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் இன்று சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் … Read more

மணிப்பூர் மாநில முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பைரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , கிரெண் ரிஜ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.

விளையாட்டாக தண்ணீர் பலூன் வீச்சு! வேகமாக வந்த ஆட்டோ கவிழ்ந்து இருவர் படுகாயம்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத்தில் இளைஞர்கள் சிலர் தண்ணீர் நிரப்பிய பலூன்களை வீசியதால் வேகமாக வந்த ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத் நகரில் ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வண்ணப் பொடிகளை தூவியும், பல வண்ணங்களிலான தன்ணீர் நிரப்பிய பலூன்களை ஒருவர் மீது ஒருவர் வீசியும் உள்ளூர் மக்கள் ஹோலிப் பண்டிகையை கொண்டாடினர். இதன் ஒரு கட்டமாக இளைஞர்கள் சிலர் சாலையில் வரும் வாகனங்கள் மீது தண்ணீர் … Read more

பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்ப பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?- சிவசேனா கேள்வி

புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது பரிவு காட்டும் பிரதமர் மோடியும், பாஜகவும் அவர்கள் காஷ்மீருக்கு திரும்ப இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் … Read more