அமைச்சர்களுக்கு டார்கெட் – முதலமைச்சர் சூப்பர் ப்ளான்!

பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பக்வந்த் மன் இலக்கு வைத்து உள்ளதாகவும், அதனை நிறைவேற்றாவிட்டால், அவர்களை பதவியில் இருந்து விலக மக்கள் வலியுறுத்தலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி அக்கட்சி புதிய … Read more

சுதந்திரமாக செயல்பட அனைவரும் நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள் – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சுதந்திரமாக செயல்பட அனைவரும்  நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார். துபாயில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவின் நீதித்துறை முற்றிலும் சுதந்திரமானது என்பதை உலகம் கண்டுணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசுக்கும் நீதித்துறைக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். தாம் வெளிநாட்டுப் பயணம் செல்லும் இடமெல்லாம் இந்தியாவின் நீதித்துறை முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமா என்ற கேள்வி எழுவதை சுட்டிக் காட்டிய நீதிபதி … Read more

மணிப்பூர் மாநில முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு: இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு.!

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பைரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக … Read more

எந்தெந்த இடங்களை தாக்கும் 'அசானி' புயல்? – இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல் அந்தமான் நிகோபார் தீவுகள், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் அந்தமான் நீங்கலாக இந்தியாவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செயற்கைக்கோள் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை முதல் மிக கனமழை வரை அந்தமான் நிகோபார் தீவுகளில் பதிவாக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் … Read more

போபால் சிறையில் கோயில் அர்ச்சகர் பயிற்சி: கவுரவமான மறுவாழ்வுக்கு தயாராகும் கொடூர குற்றதண்டனைக் கைதிகள்

போபால்: போபாலில் சிறையில் கோயில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அடுத்து அங்குள்ள கொடூர குற்றங்களுக்கான தண்டனைக் கைதிகள் கவுரவமான மறுவாழ்வுக்கு தயாராகி வருகின்றனர். வாழ்க்கையில் ஏதோஒரு சூழ்நிலையில் சந்தர்ப்பவசத்தால் மனிதன் குற்றச் செயலில் ஈடுபடுபவனாக மாறுகிறான். ஆனால் வேறொரு சந்தர்ப்பம் அளித்தால் அவன் தன்னை நல்லவனாகவும் நிலைநிறுத்திக்கொள்ளமுடியும் என்கிறார்கள் போபாலில் இயங்கிவரும் காயத்ரி சக்திபீத் என்ற அமைப்பினர். இவர்கள் சிறையில் கொடூர குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளையே நேரில் சென்று சந்தித்து பேசி அவர்களது … Read more

மணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் தேர்வு : பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு

மணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் தேர்வு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு ஆளுநர் இல.கணேசனிடம் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மணிப்பூர் முதலமைச்சராக பிரேன் சிங் தேர்வாகியுள்ளார் மணிப்பூர் முதல்வராக உள்ள பிரேன் சிங் மீண்டும் பதவியேற்க உள்ளார் மணிப்பூரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பிரேன் சிங் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு … Read more

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலங்களில் உட்கட்சி பூசல் நிலவுவதால் ஆட்சியமைப்பதில் தாமதம்: டெல்லி முதல்வர்

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலங்களில் உட்கட்சி பூசல் நிலவுவதால் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப்பில் நேரத்தை வீணடிக்காமல் ஆம் ஆத்மீ ஆட்சி அமைத்துள்ளது என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

கணவர் தின்பண்டம் வாங்கச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் – உ.பி.யில் பயங்கரம்

உத்தர பிரதேசத்தில் ரயிலுக்கு காத்திருந்த போது கணவன் தின்பண்டம் வாங்க போன நேரத்தில், மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு ரயில் ஏறுவதற்காக கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். ரயில் வர தாமதமானதால் அவர்கள் இருவரும் காத்திருப்பு அறையில் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சாப்பிட தின்பண்டம் வாங்கி வருகிறேன் என்று மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில், காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு … Read more

181.21 கோடி கோவிட்-19 தடுப்பூசி: இந்தியா சாதனை

புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 181.21 கோடியைக் கடந்தது இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (26,240) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.06% ஆக உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,196 நோயாளிகள் குணமடைந்ததையடுத்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,24,65,122 ஆக உள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்தியாவில் கடந்த … Read more

அடுத்த 5 ஆண்டில் ஜப்பான் இந்தியாவில் ரூ.3.19 லட்சம் கோடி முதலீடு செய்யும் – ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 3 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஜப்பான் முதலீடு செய்யும் என அந்நாட்டின் பிரதமர் பூமியோ கிசிடா தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய – ஜப்பானிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பான் பிரதமர் சந்தித்துப் பேசினார். அதன்பின் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். 2014ஆம் ஆண்டு அறிவித்தபடி இந்தியாவில் ஜப்பான் முதலீடு இரண்டரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் மின்சாரக் காருக்கான பேட்டரி … Read more