இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை

ஈரானுடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் குறித்து எஸ்சிஓ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த … Read more

குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? – விமான போக்குவரத்து துறை விளக்கம்

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் என்ன நடந்தது என்பது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள், விமானம் விழுந்த விடுதியில் இருந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய … Read more

‘தக் லைஃப்' தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக‌ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை … Read more

10 நிமிடம் தாமதமானதால்…  அகமதாபாத் விமான விபத்தில் தப்பிய இளம்பெண்!

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை. இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன். எனக்கு நடுக்​கம் ஏற்​பட்​டது. எனது கால்​கள் நடுங்​கத் தொடங்​கின. சிறிது நேரம் செயலற்ற நிலை​யில் … Read more

“எப்படி உயிர்ப் பிழைத்தேன் என தெரியவில்லை” – பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் அதிர்ச்சி

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார். அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானம் மேலெழுந்ததும் ஏதோ கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளி வந்தது. விமானத்தை மேலெழுப்ப பைலட்கள் முயற்சித்தார்கள். ஆனால், விமானம் முழு வேகத்தில் சென்று கட்டிடத்தின் மீது மோதியது. நான் விழித்துப் பார்த்தபோது, என்னை சுற்றியும் … Read more

கேரள நர்ஸ் ரஞ்சிதா முதல் மருத்துவ மாணவி வரை – அகமதாபாத் விமான விபத்து துயரம்

பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ் ரஞ்சிதா கோபக்குமார் (39) அங்கு வேலையை விட்டு விட்டு கேரளாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருந்தார். அதற்கான வேலைகளை முடிப்பதற்காக ரஞ்சிதா, லண்டனுக்கு மீண்டும் செல்ல முடிவு செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்போது, “லண்டன் வேலையை விட்டு விட்டு தென் கேரளாவில் உள்ள தனது சொந்த கிராமமான புல்லாட்டில் அவர் குடியேற முடிவு செய்திருந்தார். இதற்கா அங்கு புதிதாக வீடு … Read more

விஸ்வாஷ் குமாரின் ‘அதிர்ஷ்ட சீட்’ – ஐரோப்பாவில் வெறுக்கப்படும் இருக்கை எண் 11ஏ

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​திலிருந்து லண்​ட​னுக்கு நேற்று முன்​தினம் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விமான விபத்​தில் உயிர் பிழைத்​தவர் விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்​பவர் ஆவார். அவர் அமர்ந்​திருந்​தது 11 ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​தான். இந்த இருக்​கை​யானது, ஐரோப்​பிய நாடு​களில் இயக்​கப்​படும் 737 வகை போயிங் விமானங்​களில் மிக​வும் வெறுக்​கப்​படும் இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இயக்​கப்​படும் 787 போயிங் விமானங்​களில் … Read more

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு

அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. பிஜி மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தவால் கமேட்டி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்திக்கையில், “இன்றைய நிலவரப்படி விமான விபத்துப் பகுதியிலிருந்து 270 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். மேலும், விமான விபத்து … Read more

“பணம் ஓர் உயிரை திரும்பத் தராது” – அகமதாபாத் விபத்தில் தந்தையை இழந்த மகள் கண்ணீர்!

அகம​தா​பாத்: “ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு என் தந்தையை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. பணம் ஓர் உயிரை திரும்பக் கொடுக்கப் போவதில்லை.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கமாகப் பேசியுள்ளார். அகமதாபாத் விமான விபத்து பல குடும்​பங்​களின் கனவு​களை கலைந்து சுக்குநூறாக்கிய நிலையில், தனது தந்தையை இழந்த மகள் பகிர்ந்த வீடியோ கண்களை கனக்கச் செய்கிறது. அகமதாபாத் விமான விபத்து, பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ், … Read more

நீட் தேர்வு முடிவுகள் 2025: டாப் 100-ல் இடம் பெற்ற தமிழக மாணவர்கள்! எத்தனை பேர் தெரியுமா?

NEET UG Results 2025 TN Candidates Top 100 : நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில், முதல் இடத்தை மகேஷ் குமார் என்பவர் பிடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து தமிழக மாணவர்கள் யாரெல்லாம் டாப் 100ல் இடம் பெற்றுள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.