அமைச்சர் அமித் ஷாவை அவமதித்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

ராஞ்சி: கடந்த 2018-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகழைக் கெடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சாய்பாசா நகரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரதாப் குமார் என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால், … Read more

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி – 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​களை தவறாக சேர்த்​தது தொடர்​பாக இந்​திய தேர்​தல் ஆணையம் (இசிஐ) 4 அதி​காரி​களை சஸ்​பெண்ட் செய்​துள்​ளது. இதுகுறி்த்து இசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் தரவுத்​தளத்​தின் உள்​நுழைவு சான்​றுகளை அங்​கீகரிக்​கப்​ப​டாத நபர்​களு​டன் பகிர்ந்து கொண்​டது மற்​றும் பெயர்​களை தவறாக சேர்த்​தது குறித்து பருய்​பூர் புர்​பா​வில் பணியாற்​றிய நான்கு அதி​காரி​கள் மீது மேற்கு வங்க தலைமை தேர்​தல் அதி​காரி இசிஐ-க்கு புகார் தெரி​வித்​தார். இதையடுத்து அந்த நான்கு … Read more

நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை இன்று காலை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பின. விவாதத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து எதிர்க்கட்சிகள் … Read more

“நியாயமற்ற நடவடிக்கை” – அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்தியாவின் இறக்குமதிகள், சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டு, 140 கோடி இந்திய மக்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்பது உட்பட, இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை … Read more

டெல்லியில் நடை பயிற்சி சென்றபோது தமிழக எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது: 4 பவுன் தங்க சங்கிலி மீட்பு 

புதுடெல்லி: டெல்லி நடைபயிற்சி மேற்கொண்டபோது, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவரை டெல்லி போலீஸார் கைது செய்து 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா, டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் கடந்த 4-ம் தேதி காலை 6.15 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்றனர். சாணக்யபுரியில் உள்ள … Read more

உத்தராகண்ட் மேகவெடிப்பு: இதுவரை 190 பேர் மீட்பு, 100+ பேரை தேடும் பணி தீவிரம்

தாராலி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தரளி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு – பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 190 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தரளியில் பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. தரளியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் இதுவரை (இன்று காலை 9 மணி வரை) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல், தேசிய மற்றும் மாநில … Read more

டெல்லி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஐபோன் 16 புரோ – நெட்டிசன்கள் கொந்தளிப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 70 பேருக்கும் ஐபோன் 16 புரோ, ஐபேட் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காகித பயன்பாடு இல்லாத டிஜிட்டல் சட்டப்பேரவை என்ற நகர்வின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு, நெட்டிசன்கள் கொந்தளிப்புடன் எதிர்வினையாற்றி வருகின்றனர். NeVA எனப்படும் தேசிய இ-விதான் அப்ளிகேஷன் முயற்சியின் கீழ் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி முதல் முறையாக பேரவை கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதிய … Read more

2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.. மக்களே எச்சரிக்கை

Beware of Ration Card Holders: பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, சில விதிகளின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயருக்கு தடை இல்லை: சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தமிழக அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசியல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடை கோரி அதி​முக … Read more