உ.பி.யில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த உ.பி.யைச் சேர்ந்த 104 வயது கைதி விடுவிக்கப்பட்டார். உத்தர பிரதேசம் கவுசாம்பி மாவட்டம் கவுராயே கிராமத்தைச் சேர்ந்தவர் லகான். இவர் கடந்த 1921-ம் ஆண்டு பிறந்தவர். இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 1977-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். … Read more

நாட்டின் முதலாவது 9,000 எச்.பி. திறன் கொண்ட ரயில் இன்ஜின் – பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

நாட்டின் முதலாவது 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரயில்வே இன்ஜின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே இன்ஜின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் எச்.பி(குதிரை சக்தி) திறன் கொண்ட ரயில்வே இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலை மூலம் தயாரித்த முதலாவது 9 ஆயிரம் எச்.பி. … Read more

அமித் ஷாவை விமர்சித்த வழக்கில் ராகுலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி. – எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது. மேலும், வரும் ஜூன் 26-ம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து தெரிவித்த … Read more

''பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' – பிரதமர் மோடி

புதுடெல்லி: “சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி, மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் உரையாடி வருகிறார். அதன்படி, தனது 122 மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படை வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் … Read more

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, பிஹார், ஆந்திரா … Read more

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா: நிதி ஆயோக் சிஇஓ தகவல்!

புதுடெல்லி: இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 10வது நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியம் கூறியதாவது: நான் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு. நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம். … Read more

'பாலியல் தொழிலாளி போல்' உலக அழகி போட்டியில் இருந்து விலகிய முதல் பெண் – ஷாக் கருத்து!

Milla Magee: இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் இருந்து இங்கிலாந்து அழகி மில்லா மேகி திடீரென விலகியதற்கு பல்வேறு பகீர் காரணங்களை தெரிவித்துள்ளார்.

கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை கிழிந்த விவகாரம் – வளர்ச்சி நிரம்பி வழிவதாக காங்கிரஸ் கேலி!

புதுடெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை ஒன்றில் மழைநீர் தேங்கி இடிந்து விழுந்தது. இதனால் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. மழைநீர் தேங்கி கூரை இடிந்து விழும் வீடியோவை கேரளா காங்கிரஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஒரு தூரலுக்கு பின்பு டெல்லி விமான நிலையத்தில் விகாஸ் (வளர்ச்சி) நிரம்பி வழிகிறது எனப் பதிவிட்டுள்ளது. பகிரப்பட்ட வீடியோ விமான … Read more

என்டிஏ முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையை பாராட்டி தீர்மானம்!

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில், ஆயுதப்படைகளின் வீரத்தையும், பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தில் ஆபரேஷன் சிந்தூர் இந்தியர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் தலைமையை பாரட்டியிருந்த தீர்மானம், அவர் (மோடி) எப்போதும் ஆயுதப்படைகளை ஆதரித்து வந்துள்ளதாகவும், ஆபரேஷன் சிந்தூர் … Read more

தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினார் லாலு பிரசாத் – பின்னணி என்ன?

பாட்னா: பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துள்ளார். இதுகுறித்து ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக விழுமியங்களைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. எனது மூத்த மகனின் செயல்பாடுகள் … Read more