16 ஆண்டுகளுக்கு பின்… முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை – அதிக மழை பெய்யுமா?
Southwest Monsoon: தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Southwest Monsoon: தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
பெர்லின்: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 23) ஜெர்மனியின் பெர்லினில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலுடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஜெய்சங்கர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த உடனேயே நான் பெர்லினுக்கு வந்தேன். அந்த சூழலில் வடேபுலுக்கு நான் தெரிவித்ததை … Read more
புதுடெல்லி: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக அமையும். சாதகமான சூழல்: கடந்த இரண்டு தினங்களாகவே அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழைக்கு முந்தைய மழைப்பொலிவும் … Read more
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா நேற்று தனது கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகளை வழங்கினார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா இன்று (மே 24) பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கடந்த புதன்கிழமை பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதேநாளில் மும்பையில் அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலமானார். இதையடுத்து மும்பை சென்ற ஓகா, நேற்று முன்தினம் தனது தாயாருக்கு இறுதிச் சடங்குகளை … Read more
புதுடெல்லி: நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டெல்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 3 ஆக உயர்ந்தது. விசாகப்பட்டினம், மத்துலபாளையம் பகுதியில் 28 வயது பெண் ஒருவருக்கும் நந்தியாலா மாவட்டம், சீகலமர்ரி எனும் ஊரில் 75 … Read more
புதுடெல்லி: யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி … Read more
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிக்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “நாட்டிலேயே மிகக் குறைந்த வறுமை நிலைகளை கேரளா தொடர்ந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வலுவான மற்றும் திறமையான பொது விநியோக முறை மூலம் இதை அடைய முடிந்தது. … Read more
மாஸ்கோ: திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது. இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம். ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் பிற செனட்டர்களுடன் எம்.பி கனிமொழி தலைமையிலான … Read more
புதுடெல்லி: ராஜஸ்தானின் கோட்டா நகரில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து அம்மாநில அரசை கடுமையாக சாடியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிலைமை மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “அரசாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தக் குழந்தைகள் கோட்டாவில் மட்டும் ஏன் இறக்கிறார்கள்? ஓர் அரசாக இதுபற்றி நீங்கள் யோசிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியது. … Read more
கொல்கத்தா: உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து வெளிவர வங்கதேசத்துக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.நாராயணன், “இந்தியாவுக்கு மிகப் பெரிய வலிமை உள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது. அதேநேரத்தில் அந்த வலிமை என்பது கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒரு பொறுப்பான மற்றும் பெரிய சக்தி என்பதை … Read more