“தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தை கூட்டுக” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானஜி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு பிரதிநிதிகள் குழுக்கள் சென்றிருப்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொடர்ந்து கூறிவருவது போல, தேசத்தின் நலனுக்காகவும், நமது இறையாண்மையை … Read more

“இந்திய வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது” – ஜெய்சங்கர் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜேஜே விளக்குவாரா: இந்தியா ஏன் பாகிஸ்தானுடன் இணை வைக்கப்படுகிறது? பாகிஸ்தானைக் கண்டிப்பதில் ஒரு நாடு கூட நம்மை ஆதரிக்கவில்லையே ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “மத்தியஸ்தம்” செய்ய ட்ரம்பிடம் யார் கேட்டார்கள்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார். தொடர்ந்து, “இந்தியாவின் … Read more

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், ஜெய்ப்பூரில் இனிப்புகளின் பெயரில் இருந்து பாக் என்ற சொல்லை நீக்கி உள்ளனர். 

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என்று வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் மீண்​டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் பேட்டி அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. ஏப்​ரல் 22-ம் தேதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் … Read more

டெல்லியில் இடியுடன் மழை; கோவாவுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கோவாவுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், ராஜஸ்தானுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா, “டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 … Read more

‘விமானத்தில் சேதம்; அவசரமாக தரையிறங்க வேண்டும்’ – இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்!

புதுடெல்லி: டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் சென்றபோது திடீரென வானிலை மாறியதை அடுத்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி அனுமதி கோரியுள்ளார். அதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டதைக் கூறியும் பாகிஸ்தான் அனுமதி மறுத்த நிலையில் விமானி சாதுர்யமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடந்தது என்ன? – கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து … Read more

மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக தமன்னா தேர்வு: விமர்சனங்களை எதிர்கொள்ளும் கர்நாடகா அரசு!

பெங்களூரு: மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா பாட்டியாவை அச்சோப்பினைத் தயாரிக்கும் கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிட்டர்ஜெண்ட் லிமிட் (கேஎஸ்டிஎல்) நியமித்துள்ளது சிலரின் எதிர்பினைச் சந்தித்துள்ளது. கர்நாடகா அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மைசூர் சேண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா பாட்டியா, 2 ஆண்டுகள், இரண்டு நாட்களுக்கு ரூ.6.2 கோடிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தது. தமன்னாவின் நியமனம் சமூகத்தின் சில பிரிவினரின் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளது. பெண் ஒருவர் தனது எக்ஸ் … Read more

வட மாநிலங்களில் புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: உ.பி.யில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் கனமழை காரண​மாக மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக வெப்​பத்​தில் தகித்து வந்த டெல்​லி-என்​சிஆர் பகு​தி​களில் புழுதி காற்​றுடன் ஆலங்​கட்டி மழை பெய்​தது. மழை பாதிப்​பால் இரு​வர் உயி​ரிழந்​தனர். 11 பேர் காயமடைந்​தனர். நீண்ட நாட்​களாக டெல்​லி​யில் வெப்​பம் அதி​கரித்து வந்த நிலை​யில், தற்​போது பெய்​துள்ள மழை​யால் ரம்​மிய​மான சூழல் நில​வுவ​தால் பொது​மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். பலத்த காற்று வீசி வரு​வ​தால் நொய்​டாவுக்கு அருகே உள்ள … Read more

வக்பு திருத்தச் சட்ட வழக்கின் இடைக்கால உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வக்பு திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பு தொடர்பான 3 அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

புதுடெல்லி: தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுக்கு ஜப்​பான், ஐக்​கிய அரபு அமீரகம் முழுஆதரவு அளித்​துள்​ளன. தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களிடம் ஆதா​ரத்​துடன் எடுத்​துரைக்க சசி தரூர், ரவிசங்​கர் பிர​சாத், கனி​மொழி உள்​ளிட்​டோர் தலை​மை​யில் 7 எம்​பிக்​கள் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளன. ஐக்​கிய ஜனதா தள எம்பி சஞ்​சய் ஜா தலை​மையி​லான எம்​பிக்​கள் குழு ஜப்​பான் தலைநகர் டோக்​கி​யா​வில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்​சர் டகேஷி இவா​யாவை நேற்று சந்​தித்​துப் பேசி​யது. இதுகுறித்து சஞ்​சய் … Read more