Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நாள்தோறும் போராட்டங்களை இண்டியா … Read more

ஆதார் கார்டு கூட வேலைக்கு ஆகாது… உங்களை இந்திய குடிமக்கள் என நிரூபிக்கும் இந்த 11 ஆவணங்கள்!

Proof Of Citizenship: இந்திய நாட்டின் குடிமக்கள் என நிரூபிக்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லாத இந்த 11 ஆவணங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவுகளின்படி, பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல்கள் நாளை அதாவது வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2025 அன்று அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பிஹாரின் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் (DEO) பிஹாரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் காகித … Read more

மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

ஹைதராபாத்: ஆந்​திர மாநிலத்தை சேர்ந்த டி.​ராம​தாசப்ப நாயுடு (61) மத்​திய அரசின் பிரதம மந்​திரி முத்ரா யோஜனா திட்​டத்​தின் கீழ் ‘முத்ரா விவ​சாய திறன் மேம்​பாட்டு மல்டி ஸ்டேட் கூட்​டுறவு சொசைட்​டி’ நிறுவனத்தை கடந்த 2020-ல் தொடங்​கி​னார். இதில் முக்​கிய நிர்​வாகி​யாக இவரது மகன் சாய் கிரண் (45) நியமனம் செய்​யப்​பட்​டார். தந்​தை​யும், மகனும் இணைந்து இந்த கூட்​டுறவு சங்​கத்​தில் 2000 பேருக்கு மார்க்​கெட்​டிங் சூப்​பர்​வைஸர் வேலை வழங்​கு​வ​தாக ஒரு பத்​திரி​கை​யில் விளம்​பரம் செய்​தனர். இதனை நம்பி … Read more

சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்

புதுடெல்லி: சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக முன்னாள் பொதுச் செயலாளரும் இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் மாதவ், “ஆழமான தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவை விட சீனா சில மாதங்களே பின்தங்கியுள்ளது. இந்தியா நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது. சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்காவுக்கு இந்தியாவால் மட்டுமே … Read more

பேருந்தில் பாலியல் அத்துமீறல்! கன்னத்தில் பளாரென அறைந்த சிங்கப்பெண்..வைரல் வீடியோ

Video Bus Sexual Assault Woman Confronts Man: கேரளாவில், ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. இதையடுத்து, அத்துமீறிய நபருக்கு அந்த பெண் கொடுத்த தண்டனை இணையத்தில பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.  

‘மாலேகான் வழக்கு தீர்ப்பு காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி’ – சாத்வி பிரக்யா சிங்

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிரக்யா சிங், “ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அதற்கு ஓர் அடிப்படை காரணம் இருக்க வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தேன். என்னை விசாரணைக்கு அழைத்தனர், பின்னர் கைது செய்து சித்ரவதை செய்தனர். இது என் முழு வாழ்க்கையையும் நாசமாக்கியது. … Read more

சர்ச்சைக்குரிய பயங்கரவாத வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

Malegaon Blast News In Tamil: 2008 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு.. தொடந்து நடைபெற்ற விசாரணை. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என குற்றம் சாட்டப்பட்ட ஏழு குற்றவாளிகழியும் நீதிமன்றம் விடுவித்தது. மாலேகான் குண்டுவெடிப்பு என்றால் என்ன? அந்த வழக்கின் பின்னணி மற்றும் முழுமையான காலவரிசை குறித்து முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி.பிரக்யா சிங் தாக்குர், லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை வழங்கிய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, “சந்தேகம் மட்டுமே வழக்கை முன்னோக்கிக் கொண்டு சென்றுவிடாது, குற்றச்சாட்டுகளைஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. சந்தேகத்தின் பலனைப் பெற்று குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார். … Read more

1965-ம் ஆண்டு நடந்த போரில் 45, 1971-ல் 71 விமானங்களை இழந்தோம்: மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தகவல்

புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்​களை​யும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நாம் இழந்​தோம் என்று மக்களவை​யில் பாஜக எம்.பி. நிஷி​காந்த் துபே பேசி​னார். மக்​களவை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தின்​போது பாஜக எம்பி நிஷி​காந்த் துபே இந்​தி​யில் பேசிக் கொண்​டிருந்​தார். அப்​போது நாடாளு​மன்​றத்​தில் செயல்​பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்​பில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்டு பேச்சு தடைபட்​டது. அதாவது அவர் இந்​தி​யில் பேசுவதை மொழிபெயர்த்து எம்​.பி.க்​களின் ஹெட்​போன் வழியே ஒலிபரப்​பும் கருவி பழுதடைந்​தது. இதைத் … Read more