இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தேர்வு
புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி கடந்த 2019-ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த பதவிக்கு டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், 2022-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் … Read more