தீவிரவாதிகள் 3 பேரும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகள் கிடைக்கும்போது அவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று எனக்கு நாடு முழுவதிலும் பொது மக்களிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தன. தீவிரவாதிகள் இருப்பிடம் கண்டறியப்பட்டு 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் தற்செயலாக அந்த மூவரும் தலையில் சுடப்பட்டே இறந்தனர். பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் … Read more

ரகசிய சுரங்கங்களில் தண்ணீரைச் செலுத்தி தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு

புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பியோடுவது முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். … Read more

இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ராக்கெட் மூலமாக திட்டமிட்ட கற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Racter) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. பின்னர், ரூ.12,000 … Read more

மேகாலயாவின் ஒற்றை காங்கிரஸ் எம்எல்ஏவும் ஆளும் என்பிபி கட்சியில் இணைந்தார்!

மேகாலயாவின் ஒரே ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவான ரோனி வி.லிங்டோ இன்று (ஜூலை 30) அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியில் (NPP) இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாகப் பணியாற்றிய லிங்டோ, மைலீயம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் இன்று துணை முதல்வர் ஸ்னியவ்பாலங்தார் உட்பட மூத்த என்பிபி தலைவர்கள் முன்னிலையில் இணைப்புக் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் தாமஸ் ஏ. சங்மாவிடம் சமர்ப்பித்தார். இதுகுறித்து பேசிய சபாநாயகர் சங்மா, “அவரது கடிதத்தை ஆய்வு செய்த பிறகு, … Read more

‘சீன குரு’ – ராகுல் காந்தியை கேலி செய்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

புதுடெல்லி: ராகுல் காந்தியை ‘சீன குரு’ எனக் கூறி கேலி செய்த ஜெய்சங்கர், தனக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மாநிலங்களவையில் பதிலடி கொடுத்தார். 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, “சீனாவைப் பற்றிய வெளியுறவு அமைச்சரின் புரிதல் மேலோட்டமானது. நான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு உரையாடலை நடத்தினேன். அவருக்கு அது புரியவில்லை,” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சீனா தொடர்பான விவாதத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், … Read more

நடப்பாண்டில் 9 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: இந்தாண்டில் இன்னும் 9 ராக்கெட்கள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசியதாவது: முதல்முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுகள், உலகளாவிய விஞ்ஞானக் குழுக்களுக்கு வழங்கப்படும். எனவே, பல துறைகளில் ஆராய்ச்சிகள் பரவலாக செய்ய முடியும். நிசார் செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்படும் தரவுகள் மட்டும் படங்களை எதிர்நோக்கி உலக நாடுகளில் உள்ள அனைத்து … Read more

இஸ்ரோ – நாசா உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன்பின்னர் இருநாடுகளின் … Read more

லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு … Read more

விண்ணில் பாய்ந்தது NISAR செயற்கைகோள்… இதனால் என்னென்ன பயன்?

NISAR Satellite Launch: நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்த NISAR செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

நேரு மீதான ஜெய்சங்கரின் குற்றச்சாட்டு கொடூரமானது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த குற்றச்சாட்டு கொடூரமானது என கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் வெளியுறவு அமைச்சர் தொழில்முறை நிபுணராக அறியப்பட்டார். ஆனால், தற்போது அதற்கான அறிகுறியைக்கூட கைவிட்டுவிட்டதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். நேரு குறித்தும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் … Read more